கூகுலில் படங்களை இப்படியும் தேடலாம்! Reverse Image Search in Google





கூகில் தேடற் பொறியில் படங்களைத் தேடும்போது உங்களுக்கு தேவையான பட வகையின் பெயரை தேடற் பெட்டியில் டைப் செய்து படங்களைத் தேடும்;போது நீங்கள் வழங்கிய தேடற் சொல்லுக்குப் பொருத்தமான அல்லது அதற்கு சமமான ஏராளமான படங்களை கூகில் தேடித் தரும் என்பதை அறிவீர்கள். ஆனால் நீங்கள் கணினியில் சேமித்து வைத்திருக்கும் படத்திற்குச் சமமான படங்களை தேடும் வசதியையும் கூகில் வழங்குகிறது என்பதை அறிவீர்களா?

நீங்கள் ஏற்கனவே கணினியில் சேமித்து வைத்திருக்கும் படத்தை ஒத்த வேறொரு படத்தை அல்லது படங்களைத் தேடிப் பெற பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.



கூகில் பட தேடல் ( image search window) விண்டோவில் தேடற் பெட்டியில் வலது மூலையில் உள்ள கேமரா ஐக்கனில் க்ளிக் செய்யுங்கள். திறக்கும் விண்டோவின் ஊடாக உங்கள் கணினியில் சேமித்து வைத்திருக்கும் படத்தை அப்லோட் செய்து விடுங்கள் அல்லது நீங்கள் தேட விருக்கும் படம் வேறொரு இணைய தளத்தில் பார்த்ததாயிருந்தால் அப்படத்தின் இணைப்பை (URL) இணைத்து விடுங்கள்.




உடனே நீங்கள் அப்லோட் செய்த படத்திற்குச் சமமான அல்லது அது போன்ற வேறு படங்களை கூகில் தேடற்பொறி பட்டியலிட்டுக் காட்டும். ஆனால் இவ்வகையான பட தேடலின் போது நீங்கள் எதிர்பார்க்கும் கருப்பொருள் கொண்ட படத்திற்குப் பதிலாக நீங்கள் அப்லோட் செய்த படத்தின் நிறத்துக்குச் சம்மான வேறு கருப்பொருளில் படங்களையும் கூகில் தேடித் தர வாய்ப்புள்ளது என்பதையும் மறந்து விடாதீர்கள்.