Google Maps செயலியில்  உங்கள் வீட்டை, வியாபார நிலையத்தை அடையாளமிடுவது எப்படி?

கூகுல் மேப்ஸ் தளத்தில், வியாபார நிறுவனங்கள், பாடசாலைகள், மதஸ்தளங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வீடுகள் என ஏராளமான இடங்கள் பெயர் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்.  இந்தப் பெயர்கள் எதுவும் கூகுல் நிறுவனம் அடையாளமிடுவதில்லை. எங்களைப் போன்ற சாதாரண கூகுல் மேப்ஸ் பயனர்களே அதனை அடையாளமிடுகிறார்கள்.

இந்த அடையாளமிடும்  வேலைக்கு  கணினி,  மொபைல் என இரண்டு சாதனங்களையும் பயன் படுத்தலாம்.   ஆனால் மொபைல் ஃபோன் மூலமாக இலகுவாக அடையாளமிட முடியும்.  இங்கு அண்ட்ராயிட் மொபைல் மூலம் எவ்வாறு  ஓர் வியாபார நிலையத்தை அடையாளமிடுவது என்பது  பற்றி விவரிக்கப்படுகிறது.


 
  • முதலில் Google Maps செயலியைத் திறந்து கொள்ளுங்கள.
  • அங்கு மேற் பகுதியில் தோன்றும் தேடற் பெட்டியில் நீங்கள் சேர்க்க விரும்பும்  இடம் அமைந்துள்ள பிரதேசத்தின் பெயரை டைப் செய்து தேடுங்கள்.
  • அப்போது அந்தப் பிரதேசத்தை கூகுல் மேப்பில் காண்பிக்கும்.இந்த செயற்பாட்டுக்கு கூகுல் மேப்பின் செய்மதி தோற்றமே (Satellite View) மிகவும் பொருத்தம் என்பதால் சேட்டலைட் காட்சிக்கு மாறிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் அடையாளமிட விரும்பும் இடத்தினை மேப்பில்  போதியளவு  ஷூம் (zoom) செய்து பெரிதாக்கிக் கொள்ளுங்கள்.
  • உங்கள் இடத்தினை மேப்பில் காணக் கூடியாதாக இருந்தால் அந்த இடத்தில் விரலால் ஒரு நீண்ட அழுத்தத்தைப் பிரயோகியுங்கள்.
  • அப்போது  நீங்கள் குறிப்பிடும் இடத்தில் ஒரு சிவப்பு நிற பலூன் குறியீடு தோன்றும் . அதாவது உங்கள் இடம் இங்கு  பின் செய்யப்படும்.
  • அடுத்து மேப்பின் மேலே மூன்று கோடுகளால் காண்பிக்கப்படும் மெனு பட்டனில் தட்டுங்கள்.


  • தோன்றும்  மெனுவிலிருந்து  Add a missing place என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
  • அப்போது தோன்றும் பெட்டியில் அந்த இடம் பற்றிய மேலதிக விவரங்களை வழங்க வேண்டும்.Name, Address   எனும் பகுதிகளில்  நீங்கள் அடையாளமிட விரும்பும் இடத்தின் பெயரை யும்  முகவரியையும்  வழங்குங்கள்.
  • அடுத்து Mark location on map எனும் பெட்டியில் விரலால் தட்ட மறுபட்டி மேப்பைக் காண்பிக்கும்.  அங்கு சிவப்பு நிறத்தில் தோன்றும் Pin  ஐ சரியாக உங்கள் இடத்தின் மீது வரும் படி மேப்பை நகர்த்தி  OK செய்யுங்கள்.
  • அடுத்து கீழேள்ள Category பகுதியில் தட்டி  செய்து நீங்கள் அடையாளமிடும் இடம் என்ன வகையில் அடங்கும் என்பதை தரப்பட்டுளள பட்டியலிலிருந்து தெரிவு செய்து விட்டு மேலேயுள்ள அம்புக்குறி வடிவ பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
  • வியாபார நிலையம் திறந்திருக்கும் நாட்கள் மற்றும் நேரங்களை  அடுத்தடுத்த நிலைகளில் வழங்க வேண்டும்.
  • இறுதியாக ஒரு செய்திப் பெட்டி தோன்றும். அங்கு  Submit Anyway  என்பதை தட்டி விடுங்கள்.

எனினும் நீங்கள் அடையாளமிடும் இடங்கள் உடனடியாக மேப்பில் கண்பிக்கப்படமாட்டாது.  அந்த இடத்தினை ஆய்வு  செய்து  ஒரு சில மணித்தியாலங்களில் பின்னர்  மேப்பில் சேர்த்து விட்டதாக மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும். ஆனால் அடையாளமிடப்பட்ட அந்த இடத்தினை உங்களுக்கு மட்டுமே காண்பிக்கும்.
கூகுல் மேப் ஆய்வு செய்வோர் பலருக்கு  (map reviewers) அதனை அனுப்பி அந்த இடத்தின் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்திய பிறகே பொதுவாக  எல்லோரும் பார்க்கும் படியாக கூகுல் மேப்பில் காண்பிக்கப்படும். . இந்த செயற்பாட்டுக்கு ஓரிரு மாதங்கள் செல்லலாம்.


-அனூப்-