வெப் 2.0 என்றால் என்ன?



வெப் 2.0 என்பதுதகவல் தொழிநுட்பதுறையில் உள்ளோர்க்குஏற்கனவேபரிச்சயமான  ஒரு  வார்த்தைதான். வெப் 2.0  2004 ஆம் ஆண்டில்  அறிமுகமான  ஒரு வார்த்தை.இதுஉலகலாவியவலைத்தளத்தின்  (World Wide Web)   இரண்டாவதுதலைமுறையைக் குறிக்கிறது. 

”2.0”என்றவார்த்தைமென்பொருள் துறையில் இருந்துவருகிறது,மேம்பட்டவசதிகளுடன்  மென்பொருள்களின் புதியபதிப்புகள் வெளிவரும் போதுபதிப்புஎண்ணின் ஏறு வரிசையில்  பெயரிடப்படுவதுவழக்கம்.எடுத்துக் காட்டாக Windows7,8, 8.1  8.1 என்பவற்றைக்குறிப்பிடலாம்.

மென்பொருள் விருத்தி போன்றே உலகலாவிய வலைத்தள தொழில் நுட்பமும் பல மேம்பட்ட வசதிகளையும் செயற்பாடுகளையும் தற்போதுஉள்ளடக்கியுள்ளது. இவ் வசதிகள 2004 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் இணையத்தில்  கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும்,வெப் 2.0 என்பதுஉலகலாவியவலைத்தளத்தின் ஒரு குறிப்பிட்டபதிப்பாகக்  கருதப்படுதில்லை. மாறாக இது தொழில்நுட்பமேம்பாடுகளின் ஒரு தொடர்ச்சியாகும்.
வெப் 2.0 இன் பகுதியாகக்கருதப்படும் அம்சங்களின் சில எடுத்துக்காட்டுகள் கீழேபட்டியலிடப்பட்டுள்ளன:





Blogs ப்லாக்ஸ் எனும்  வலைப்பதிவுகள்.  இவை இணையபயனர்கள் தங்கள் அனுபவங்கள்,மற்றும் எண்ணங்களைஅவ்வப்போதுவலைத் தளத்தில் பதிவிடவும்  புதுப்பிக்கவும்  அனுமதிக்கின்றன.

விக்கிதளங்கள் - விக்கிபீடியாமற்றும் அதுபோன்ற  ஏனைய  விக்கிதளங்களின் உள்ளடக்கத்தைஆன்லைனிலேயேசேர்க்கவும்  புதுப்பிக்கவும்  உலகம் பூராவும் உள்ள  இணையபயனர்களுக்குஉதவுகின்றன.

சமூகவலைத்தளங்கள்  - பேஸ்புக் மற்றும் ட்விட்டர்போன்றதளங்கள் பயனர்களுக்குதங்கள் சுயவிவரக் கோவையைஉருவாக்கவும்  பிறபயனர்களுடன்  தொடர்புகொள்ளவும் தங்கள் கருத்துக்களைபகிர்ந்துகொள்ளவும் அனுமதிக்கின்றன.

வலைபயன்பாடுகள (web applications) ; - பயனர்கள் ஒரு வலைஉலாவியிலேயே  ஒரு  மென்பொருளைநேரடியாக  இயக்குவதற்கும்  பயன்படுத்துவதற்கும் வசதிசெய்கின்றன.



வெப் 2.0 தொழில்நுட்பங்கள்

முன்னர்கிடைக்காதஏராளமானபயனர்தொடர்புகளைவழங்குகின்றன. வலைத்தளங்கள்நிலையான (static) வலைத்தளங்களாகஅல்லாமல்  அடிக்கடிமாறக் கூடியதாகவும் (dynamic) ஒன்றோடொன்று  இணைக்கப்பட்டதாகவும் உருவாக்கப்படுகின்றன.  அதன் காரணமாக ஏராளமான”ஆன்லைன் சமூகங்கள்” (online communities) உருவாக்கப்படுவதோடு  இணையத்தில் தகவல்களைபகிர்ந்துகொள்வதும் எளிதாகிறது.

பெரும்பாலானவெப் 2.0 அம்சங்கள் இலவசசேவைகளாகவழங்கப்படுவதால்,விக்கிபீடியாமற்றும் பேஸ்புக் போன்றதளங்கள் அதிசயிக்கத்தக்கவகையில்  அதிவிரைவாகவளர்ச்சிபெற்றுள்ளன. இவ்வாறானதளங்கள் வளரும் நிலையிலேயே,மேலும் புதுப் புது  அம்சங்களும்  அவற்றோடுசேர்க்கப்படுகின்றன.

வெப்  2.0 என்பதுபுதியமேம்பட்டஉலகலாவியவலைத்தளத்திற்குக் கொடுக்கப்பட்ட ”நிலையான”  பெயராக  இருந்தாலும் ​​நிஜத்தில்  வலைதொழிநுட்பமானதுதொடர்ச்சியாக இன்றுவரைமாற்றமடைந்துகொண்டேயிருக்கிறது.