Aspect Ratio என்றால் என்ன?
Aspect Ratio (தோற்ற விகிதம்/ காட்சி விகிதம்) என்பது ஒரு பொருளின் அகலத்திற்கும் அதன் உயரத்திற்குமிடையிலான தொடர்பை விவரிக்கிறது. இது பொதுவாக செவ்வக வடிவிலான கணினித்திரை, தொலைக்காட்சித்திரை, மற்றும் சினிமா திரைகளின் அகல நீள பரிமானங்களின் விகிதாசாரத்தைக் குறிக்கிறது.
தோற்ற விகிதம் என்பது நீங்கள் கணித பாடத்தில் கற்றது போல் அகலம்: உயரம் (width:height) எனும் வடிவில்
இருக்கும். உதாரணமாக, 20 அங்குல அகலமும்
15 அங்குல உயரமும்
கொண்ட ஒரு கணினித் திரை 20:15 என்ற தோற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது எனலாம். இதனை மேலும் சுருக்கும் போது (ஒவ்வொரு எண்ணையும் மிகக் குறைந்த பொதுவான எண்ணால் வகுத்தால் பெறுவது – இங்கு 5),
4: 3, அல்லது "நான்கிற்கு மூன்று" எனும் விகிதம் கிடைக்கும். 4: 3 என்பது SD Standard Definition (SD)
தொலைக்காட்சிகளின் தோற்ற விகிதமாகும்.
ஒரு சதுர வடிவ திரை அல்லது
படம் 1: 1 என்ற தோற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. அகலத்தை விட இரு மடங்கு உயரமுள்ள ஒரு திரை 1: 2 என்ற தோற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. ஒரு திரை அதன் உயரத்தை விட 50% அகலமாக இருந்தால் அதன் தோற்ற விகிதம் 3: 2 ஆகும். HDT V எச்டிடிவி மற்றும் 4K தொலைக்காட்சிகள்
16: 9 (பதினாறிற்கு ஒன்பது) வரையிலான தோற்ற விகிதங்களைக் கொண்டுள்ளன, அதாவது உயரத்தை விட அவை அண்ணளவாக இரு மடங்கு அகலமுள்ளவை.
எடுத்துக்காட்டாக
ஒரு HDT V 1920x1080 பிக்சல்கள் பிரிதிறன் (resolution) கொண்டுள்ளது. அதன் 16: 9 எனும் தோற்ற விகிதத்தை கீழே உள்ள எண் கணித செயற்பாட்டின் மூலம் சரிபார்க்க
முடியும்.
4K என்பது HD திரையின் இன் அகலம்
மற்றும் உயரத்தின் இரு மடங்கு அல்லது 3840x 2160 பிரிதிறன் கொண்டவை ஆகும். அதனைச் சுருக்கும் போதும் 16:9 எனும் தோற்ற விகிதமே கிடைக்கிறது. { 3840 ÷ 240 = 16. 2160 ÷ 240 = 9}
பெரும்பாலான
நவீன தொலைக்காட்சிகள் 16: 9 தோற்ற விகிதத்தைக் கொண்டுள்ள அதே வேளை ஏனைய வகை திரைகள் நீளம் அதிகமாகவோ அல்லது உயரம் அதிகமாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக, பல
டேப்லெட்டுகள் மற்றும் கணினி திரைகள் 16:10 (அல்லது 8:5) விகிதத்தைக் கொண்டுள்ளன,
ஸ்மார்ட்போன்கள்
பெரும்பாலும் பக்கவாட்டில் (landscape). வைத்திருக்கும்
போது நீண்ட திரைகளைக் கொண்டிருக்கின்றன எடுத்துக்காட்டாக, Samsung Galaxy S8 18.5:9 எனும் தோற்ற விகிதத்தையும் iPhone X 19.5: 9 எனும் தோற்ற விகிதத்தையும் கொண்டுள்ளன. இச்சாதனங்களில் ஒரு HD வீடியோவைப் பார்க்கும்போது, வீடியோவானது திரையின் முழு அகலத்திற்கும் பொருந்தாது.
பதிலாக, கருப்பு
பட்டைகள் பக்கங்களில் காட்டப்படுகின்றன, ஏனெனில் வீடியோவின் தோற்ற விகிதம்
திரையின் தோற்ற விகிதத்தைப் போல் அகலமானதாக இல்லாமல் இருப்பதே
இதற்குக் காரணமாகும்.