India launched UPI payment system in Sri Lanka

இந்தியாவின் UPI சேவை தற்போது இலங்கையிலும்!



UPI என்பது இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு இடையேயான மொபைல் கட்டண பேமெண்ட் இடைமுகம் Unified Payments Interface. இது LankaPay இலனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜஸ்ட்பே கட்டண இடைமுகம் போன்றது. இந்தியாவில் ஏற்கனவே பயன்படுத்தும் Paytm, PhonePe போன்ற பிரபலமான கட்டண பயன்பாடுகள் எல்லாவற்றிலும் பணம் செலுத்தும் செயல்முறை இந்த UPI வழியாக நடை பெறுகிறது.

இலங்கைக்கு இப்போது அதிகம் சுற்றுலா பயணிகள் இந்தியாவில் வருகிறார்கள். கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சுற்றுலாப்பயணிகள் மூன்று லட்சம் பேர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவ்வாறு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் பணம் செலுத்துவதை இந்த UPI சேவை எளிதாக்குகிறது

அவர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் PayTM, PhoneP மற்றும் இந்திய வங்கிகளின் Mobile செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் இந்தியாவில் எவ்வாறு பணம் செலுத்துகிறார்களோ அதே போன்று இலங்கையிலும் அவர்கள் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு பண்ம் செலுத்த முடியும்.

எனினும் இலங்கை வர்த்தகர்கள் இந்திய பயணிகளிடம் பணத்தை அறவிடுவதற்கு அவர்களிடம் LankaQR வசதி அவசியம் இருக்க வேண்டும். தமது சொந்த வங்கியிலோ, அல்லது பணம் செலுத்தும் செயலியிலோ இலங்கை வணிகர் ஒருவர் Lanka QR இனைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு Lanka QR பெற்றுக் கொண்ட வணிகர்கள் இந்திய சுற்றுலாப் பயணிகளிடமிருந்து UPI முறைப்படி பணம் அறவிட முடியும்.

இருந்தாலும் LankaQR சேவை இலங்கையில் பரவலாக பயன் பாட்டில் இல்லை. இருப்பவர்களுக்கும் பணம் எவ்வாறு அறவிடுவது என்பது பற்றிய பொதிய தெளிவில்லை.

இந்திய சுற்றுலாப் பயணிகள் காரணமாக இலங்கை வர்த்தகர்கள் QR கட்டணம் பற்றிய தெளிவு பெறுவதும் கீட மகிழ்ச்சியானா விடயம்தான். 😎