When you send an email attachment



மின்னஞ்சலுடன் பைல்களை இணைப்பாக அனுப்பும் போது



மின்னஞ்சலுடன் ஒரு இணைப்பு கிடைக்கப் பெறும்போது அதனைத் திறந்து பார்க்கப் பலரும் அஞ்சுவர். ஏனெனில் அந்த பைலுடன் வைரஸும். இணைந்து வருமோ என்ற அச்சம்தான், எனவே ஒரு பைலை இணைப்பாக அனுப்பு முன்னர் வைரஸ் ஸ்கேன் செய்து வைரஸ் இல்லையென உறுதி செய்த பின் அனுப்புங்கள். அல்லது பைல்களள இணைப்பாக அனுப்புவதை முடிந்த வரை தவிருங்கள்.

மின்னஞ்சல் பைலின் அளவு அதிகமக இருக்கும்போது அதனை டவுன்லோட் செய்ய அதிக நெரம் எடுக்கும். எனவே எப்போதும் சிறிய அளவு கொண்ட பைல்களையே அனுப்புங்கள். உதாரணமாக படங்களை இணைப்பாக அனுப்பும் போது BMP போன்ற அதிக கொள்ளளவு கொண்ட பைலுக்குப் பதிலகா அவற்ரை GIF, JPG போன்ற பைல் வடிவங்களுக்கு மாற்றி அனுப்பலாம்.

படங்களல்லாத அளவில் பெரிய (ஒரு மெகா பைட்டை விட அதிகமான) வேறு வகையான பைல்களை அனுப்ப வேண்டிய தேவையேற்படின் அதனை வின்ஷிப், வின்ரார் போன்ற கருவிகளைப் பயன் படுத்தி ஷிப் செய்து பைல் அளவைச் சுருக்கி அனுப்புங்கள். 

மேலும் அளவில் பெரிய ஒரு வீடியோ பைலை அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டால் அதனைச் சிறு சிறு பகுதிகளாக வெட்டி (Split) வேறாக்கை அனுப்பலாம்.. அதற்கென ஏராலமான கருவிகள் உள்ளன.

ஒரு Word, Excel பைல் அல்லது PDF பைலை அனுப்பும் போது நண்பரிடம் அதனைத் திறப்பதற்கான உரிய மென்பொருள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு அனுப்புங்கள். அல்லது அந்த நண்பரிடம் உள்ள மென்பொருளுக்கேற்ப அதன் வடிவத்தை மாற்றி அனுப்புங்கள்.

நண்பர் விரும்பாதபோது எந்த விதமான இணைப்பையும் அனுப்பாதீர்கள். அல்லது முன் கூட்டியே அது பற்றி நண்பருக்கு சொல்லி விடுங்கள்.