What is System Bus?


என்ன இந்த System Bus ?


கணினி மதர்போர்டில் ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு டேட்டாவைக் கடத்தும் பாதையையே பஸ் எனப்படுகிறது. இந்தப் பாதை மதர்போடிலுள்ள பிற பகுதிகளை சீபியூவுடனும் நினைவகத்துடனும் இணைக்கிறது. இதனை இண்டர்னல் பஸ் (internal bus) எனவும் அழைக்கப்படும். அதேபோல் எக்ஸ்பேன்சன் பஸ் (expansion bus) எனற பகுதியும் உண்டு. இது சவுண்ட் காட், வீஜிஏ காட், மோடெம் போன்ற எக்ஸ்பேன்சன் போர்டுகள் சீபியூ மற்றும் நினைவகத்தை அணுகுவதற்கான பாதையாகும். இந்த இரு வகை பஸ்களும். எட்ரஸ் பஸ் (address bus) டேட்டா பஸ் (data bus) என இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். டேட்டா பஸ் என்பது டேட்டாவைக் கடத்தும் அதே வெளை எட்ரஸ் பஸ் எனப்படுவது டேட்டா எப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுகிறது.


பஸ்ஸின் அளவை அதன (width) அகலம் எனப்படும். ஒரே நேரத்தில் எவ்வளவு டேட்டாவைக் அனுப்ப முடியும் என்பதை இந்த பஸ் வித் தீர்மானிக்கிறது. உதாரணமாக 16 பிட் பஸ்ஸானது 16 பிட் கொண்ட டேட்டாவை கடத்தக் கூடியது.

ஒவ்வொரு பஸ்ஸும் இயங்கும் வேகத்தைk க்லொக் ஸ்பீட் (clock speed) எனப்படும். இது மெகா ஹேட்ஸில் இல் அளவிடப்படும். அதிக வேகம் கொண்ட பஸ் மூலம் விரைவாக டேட்டாவைக் கடத்த முடியும். அதன் காரணமாக ஒரு அப்லிகேசன் வேகமாக இயங்கும்.

-அனூப்-