What is Overclocking?

Overclocking   என்றால் என்ன?

கணினி வன்பொருள்களான மதர்போட், ப்ரோஸெஸ்ஸர், நினைவகம் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவை செயற்படக் கூடிய் உச்ச வேகமொன்றை நிர்ணயித்திருப்பர்கள். அவர்கள் பரிந்துரைக்கும் இவ் வேகத்தினை மாற்றியமைத்து செயற்திறனை அதிகரிப்பதையே (Overclocking)   ஓவர்க்லொக்கிங்  எனப்படுகிறது.

பொதுவாக (CPU ) சிபியூ தயரிக்கும் நிறுவனங்கள் அவை எந்த வேகத்தில் இயங்கும்போது அதன் இயக்கம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பரீட்சித்து அவ் வேகத்தை விட ஒரு படி குறைவாக அதன் உண்மையான வேகத்தை நிர்ணயிப்பார்கள். .எனினும் கணினியின் ஸ்திரத் தன்மை பாதிப்படையா வண்ணம் அவ் வேகத்தை விட சிபீயூவின் வேகத்தை மேலும் அதிகரிக்க முடியும்.

சில வேளைகளில் சிபியூ தயாரிப்ப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட வேகம் கொண்ட ப்ரோஸெஸருக்குத் தட்டுப்பாடு நிலவும் ச்ந்தர்ப்பத்தில் தாம் தயாரித்த அதிக வேகம் கொண்ட ப்ரோஸெஸ்ஸர்களையும் வேகம் குறைந்த ப்ரோஸெஸ்ஸர்களாகப் பொதி செய்து அனுப்புவதும் உண்டு. இந்த ப்ரோஸெஸ்ஸர் கிடைக்கப் பெறும் வாடிக்கையாளர் ஓவர்க்ளொக்கிங் செய்வதில் கை தேர்ந்தவராயிருந்தால் அதன் மூலம் உச்ச பயனைப் பெறலாம்.

சிபியூவை ஓவர்க்லொக்கிங் செய்வதன் மூலம், மட்டும் கணினியின் செயற் திறனில் வேகத்தை எதிர்பார்க்க முடியாது. கூடவே மதர்போட் பஸ் வேகம் (System Bus), நினைவகம் போன்றவற்றிலும் வேக அதிகரிப்பு இருக்க வேண்டும்,. உதாரணமாக ஓவர் க்லொக்கிங் மூலம் சிபீயுவில் 20 % வேக அதிகரிப்பு எற்படுத்தப்பட்டாலும் கணினியின் முழுமையான இயக்கத்தில் 20 வீத அதிகரிப்பை அவதானிக்க முடியாது. எனினும் ஏனைய பாகங்களைவிட சீபியூ அதிக வேகத்தில் இயங்க வேண்டும் என்பது நியதி. எனவே அதற்க்கேற்ப ஏனைய பாகங்களிலும் ஓவர்க்லொக்கிங் மூலம் முறையாக வேக அதிகரிப்பை உண்டாக்கி சமப்படுத்தல் வேண்டும்.

ஒவர்க்லொக்கிங் செய்வதன் மூலம் சீபியூ வழமையை விட வேகமாக செயற்படுவதோடு அதிக வெப்பத்தையும் வெளியேற்றும். ,எனவே அதற் கிசைவான சீபியூவை குளிர்விக்கும் கூலிங்பேன் (Cooling Fan) மற்றும் வெப்பத்தை உறிஞ்சும் ஹீட்சின்க் (heat sink) போன்றவறையும் பயன் படுத்த வேண்டும்.

முறையாக ஓவர்க்லொக்கிங் செய்யப்படாதபோது கணினியின் ஸ்திரத்தனமை பாதிக்கப்படும். சில வேளை சீபியூ முழுமையாக செயலிழக்கலாம் அல்லது அதன் ஆயுட்காலம் குறைவடையலாம்

ஓவர்க்லோக்கிங் செய்து மதர்போர்டின் System Bus வேகத்தை அதிகரிப்பதன் மூலமும் கணினியின் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அவதானிக்க முடியும். ஏனெனில் அப்போது கணினியிலுள்ள அனைத்து பாகங்களும் வேகமாக இயங்கும். மேலும் சீபியுவின் வேகத்தில் ஏற்படுத்தப்படும் அதிகரிப்பு மதர்போர்டடில் அதிகரிக்கப்பட்ட பஸ் வேகத்துடன் ஒத்திசைவதால் கணினி இயக்கத்தில் வேக அதிகரிப்பை அவதானிக்க முடியும். எனினும் மதர்போர்டை ஓவர் க்லொக்கிங் செய்வது மதர்போர்டிலுள ஏனைய சிறு பாகங்களை அதி உயர் வேகத்தில் இயங்க வைப்பதால் மதர்போட் பழுதடைவதற்கான வாய்ப்புமுள்ளது.

மதர்போர்டுகள் பல்வேறு பஸ் ஸ்பீடில் இயங்க வைக்கக் கூடியதாக தயாரிக்கப்படுவதனால் அவற்றைப் பல்வேறு நிலைகளில் ஓவர்க்லொக்கிங் செய்யலாம. எனினும் மதர்போட் பஸ் வேகத்தை மாற்றியமைத்து ஏனைய வன்பொருள் பாகங்களும் அதனுடன் ஒத்திசைவதாக இருந்தால் மாத்திரமே சிறந்த பெற்பேற்றைப் பெறலாம்.

ஓவர் க்லொக்கிங் செய்வதற்குப் பயோஸ் செட்டப்பில் மாற்றத்தை ஏற்படுத்தல், மதர்போர்டில் ஜ,ம்பர்களை மாற்றியமைத்தல், அதற்கென விஷேட கருவிகளைப் பயன் படுத்தல் போன்ற பல்வேறு வழி முறைகள்பின்பற்றப்படு கின்றன.

-அனூப்-