How to protect your Wi-Fi connection

Wi-Fi   திருட்டைத் தடுப்பது எப்படி?

தற்போது Wi-Fi   எனும் கம்பியில்லா வலைப் பின்னலூடாக வரும் இணைய இணைபபு  நமது நாட்டிலும்  பரவலாகப் பயன் பாட்டி;லுள்ளது. நாம் பணம் செலுத்திப் பெறும் இணைய இணைப்பை  Wi-Fi   வலையமைப்பூடாகச் செலுத்தும் போது அது நமது கணினியில் மாத்திரமன்றி  அயலவர்களின் கணினிகளையும் எட்டிப் பார்க்கிறது;. அதனால் எமது அயலவர்கள்  எந்தக் கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எமது அனுமதியின்றி இந்த வைபை இணைப்பு மூலம் இணையத்தை அணுக முடிகிறது.

உங்கள்  வீட்டில் தற்போது இணையத்தைப் எவரும்  பயன் படுத்தவில்லை. எனினும் நீங்கள் பயன் படுத்தும் ரூட்டரில் (Router) Internet LED உள்ள Internet LED விளக்கு விட்டு விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ரூட்டரில் நீங்கள் காணும் இந்த அறிகுறி வைபை இணைப்பை உங்கள் வீட்டுக்கு அருகாமையிலிலுள்ள யரோ அனுமதியின்றிப் பயன் படுத்துகிறார்கள் என்பதை  நிச்சயமாகக் கூறலாம்.

அதனை இன்னும் உறுதி செய்து கொள்ள விரும்பினால் முதலில் ஒரு பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் ரூட்டரின் ஐபி முகவரியை பிரவுசரின் முகவரிப் பட்டையில் டைப் செய்யுங்கள். அனேகமான ரூட்டர்களின் பொதுவான ஐபி முகவரியாக 192.168.1.1. என்பதே பாவனையில் இருக்கும்பின்னர் ரூட்டரை அணுகுவதற்கான பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் வழங்கி ரூட்டரின் நிர்வகிப்பதற்கான பக்கத்தினுள் நுளையுங்கள். பொதுவான ரூட்டரின் பயனர் பெயராகவும் கடவுச் சொல்லாகவும் யனஅin என்பதே பயன் பாட்டில் உள்ளது. .

ரூட்டரின் நிர்வகிப்பதற்கான பக்கத்தில் DHCP Client Table என்பதை Status - > Local Network - > DHCP Server ஊடாக அடையுங்கள். இந்த வழி முறை ஒவ்வொரு ரூட்டர் தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து வேறு படலாம். . இந்த அட்டவனையில் தற்போது உங்கள் ரூட்டரில் இணைந்திருக்கும் கணினிகள் மற்றும் பிற கையடக்கடச சாதனங்கள் அனைத்தினதும் பெயர்களைப் பட்டியலிடும். இதிலிருந்து அயலவர்கள் எவரேனும் உங்கள் வைபை இணைப்பில் உள்ளார்களா என்பதைப் பர்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் அயலவர்கள் பலரும் வைபை இணைப்பை உங்கள் அனுமதியின்றிப் பயன் படுத்துவதன் காரணம் பாதுகாப்பு முறைகள் எதுவும் பின்பற்றப் படாமல்  திறந்த நிலையில் (Open) அவர்கள் கணினியை அடைவதே காரணமாகும்

வைபை சமிக்ஞைகள் அயல் வீடுகளைச் சென்றடைவதை உங்களால் தடுக்க முடியாது. எனினும் அவர்களைச் சென்றடையும் சமிக்ஞைகளை; அனுமதியின்றிப் பயன் படுத்துவதைத் தடுக்கலாம். இவ்வாறு திருட்டுத் தனமாகப் இணைய இணைப்பைப் பயன் படுத்துவதைத் தடுப்பதற்குப் பல எளிய வழிமுறைகள் உள்ளன. இந்தப் பாதுகாப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள, முன்னர் குறிப்பிட்டது போல் இதற்கும்  ரூட்டரின் நிர்வாக பக்கத்தில் நுளைய வேண்டும்.

1.உங்கள் வைபை இணைப்புக்கான பெயரை (SSID)   பிறர் கண்டு கொள்ளாதபடி  Broadcast SSID என்பதை No என மாற்றுவதன் மூலம் மறைத்து வைக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் அயலவர்களின் கணினியை வைபை இணைப்பு அடைந்தாலும் அதனைப் பயன் படுத்துவதற்கு அதன் பெயரைக் (SSID)   அறிந்திருத்தல் வெண்டும்.. எனினும் கொஞ்சம் விசயம் தெரிந்தவர்களால் இந்தப் பாதுகாப்பை மீற முடியும்.

2. உங்கள் வைபை இனைப்பைப் பிறர் பயன் படுத்தத் தயங்கும் வகையில் அதன் SSID பெயராக  c:\virus.exe ,  Police,  Network Unavailable போன்ற சொற்களை வழங்கி அவர்களை எமாற்றலாம்.

3.உங்கள் வைபை இணைப்புக்கு ஒரு கடவுச் சொல் வழ்ங்கிப் பாதுகாக்கலாம்இதற்கு ரூட்டரின் நிர்வாகப் பக்கத்தில் நுளைந்து  வைபை பாதுகாப்பு முறைகளான (Authentication Type) என்பதில் WPA,  WPA2 மற்றும் WEP போன்ற ஏதோவொன்றைத் தெரிவு செய்து அதற்குக் கடவுச் சொல் ஒன்றையும் வழங்குங்கள். எனவே வைபை இணைப்பில் இணைவதற்குக் கடவுச் சொல்லை அறிந்திருத்தல் வெண்டும். பலரும் இந்த முறையையே கையாளுகின்றனர்.


4. உங்கள் கணினி கையடக்கத் தொலைபேசி மற்றும் டேப்லட பீசி போன்ற அனைத்து சாதனங்களுக்கும் MAC Address எனும் தனிப்பட்ட அடையாள இலக்கம் வழங்கப் பட்டுள்ளதுஇது ஐபி முகவரியிலிருந்து வேறு பட்டது. ரூட்டரின் நிர்வாகப் பக்கத்தில் MAC Address Filte எனும் பகுதியில் நீங்கள் பயன் படுத்தும் கணினிகள் அனைத்தினதும் மேக் முகவரியை வழங்கி விடுங்கள். மேக் முகவரி வடிகட்டல் MAC Address Filtering  எனும் இந்த முறை மூலம் இந்தப் பட்டியலில் உள்ளவர்களால் மட்டுமேவைபை இணைப்பைப் பயன் படுத்தக் கூடியதாய் இருக்கும். மேலே குறிப்பிட்ட  DHCP Client Table மூலம் உங்கள் சாதங்களுக்குரிய MAC முகவரியை அறிந்து கொள்ளலாம்.

-அனூப்-