Multiplicity - Two PCs with one mouse and a keyborad

Multiplicity  ஒரு மவுஸ் ஒரு விசைப் பலகை - இரண்டு கணினிகள்

இரண்டு கணினிக்ளை  ஒரேயொரு மவுஸ் மற்றும் விசைப் பலகை கொண்டு இயக்கலாம் என்பதை அறிவீர்களா?

முன்னர் நான் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை  ஒரு மவுஸ், ஒரு விசைப் பலகை மற்றும் ஒரேயொரு கணினித் திரை கொண்டு இயக்க KVM Swich  எனும் ஒரு வன்பொருள் சாதனம் இருப்பதாக இப்பகுதியில்  குறிப்பிட்டிருந்தேன்.

எனினும் இப்போது நான் சொல்ல வருவது வன் பொருளல்ல. ஒரு மென்பொருள்.  எந்தவொரு வன்பொருளும் இணைக்காமல் ஒரேயொரு மவுஸ் மற்றும் ஒரேயொரு விசைப் பலகை கொண்டு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை இயக்கக் கூடிய ஒரு மென்பொருளே Multiplicity. இது வலையமைப்பில் இயங்கும் ஒரு மென்பொருள் கருவியாகும். எனவே இதனை இயக்குவதற்கு உங்கள் கணினிகள் ஒரு வலையமைப்பில் இணைந்திருக்க வேண்டும்.

இந்த Multiplicity  மென் பொருளின் இலவச பதிப்பு ஒரே நேரத்தில் இரண்டு கணினிகளை மட்டுமே ஆதரிக்கிறது. எனினும் கட்டணம் செலுத்திய பதிப்பு ஒரே நேரத்தில் 9 கணினிகளை ஆதரிப்பதோடு மேலும் பல வசதிகளையும் கொன்டிருக்கிறது.

அவற்றுள் ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்குப் பைல் மற்றும் போல்டர்களைப் பிரதி செய்தல், எல்லாக் கணினிகளுக்கும் பொதுவாக ஸ்பீக்கரை மையப் படுத்திப் பயன் படுத்தல் போன்ற பல வசதிகள் அடங்கியுள்ளன. 

சுமார் 9 மெகா பைல் அளவு கொண்ட இந்த மென் பொருளை  http://www.stardock.com/ எனும் இணைய தளத்திலிருந்து டவுன் லோட் செய்து பயன் படுத்திப் பாருங்கள். 

-அனூப்-