What is Pixel ?
Pixel என்றால் என்ன?
ஒரு
டிஜிட்டல் படத்தை உருவாக்கும் சிறிய வண்ணப் புள்ளிகளே பிக்சல் எனப்படுகிறது. Picture Elements எனும் இரு வார்த்தைகளிலிருந்தே (Pixel) பிக்சல் என்பது உருவானது. திரையில் படங்களும்
எழுத்துக்களும் பிக்ஸல் எனப்படும் புள்ளிகளின் சேர்க்கையினாலேயே உருவாக்கப்
படுகின்றன ஒரு புகைப் படக் கருவி அல்லது ஸ்கேனர் கொண்டு உருவாக்கப் படும்
டிஜிட்டல் படங்களில் ஆயிரக் கணக்கான பிக்சல்கள் அடங்கியிருக்கும்.
கேமராவில்
எடுக்கும் புகைப்படங்க ளாயிருக்கட்டும் கணினித் திரையில்
தோன்றும் காட்சிகளாயிருக்கட்டும் இவற்றின் தெளிவுத் திறனில் பிக்ஸல்களே முக்கிய
பங்கு வகிக்கின்றன. பிக்ஸல்களின் எண்ணிக்கையையே ரெஸலுயூசன் (Resolution) எனப்படு கிறது. ஒரு
படத்தின் தெளிவுத் திறனைக் குறிப்பதற்கே ரெஸலுயூசன் எனும் வார்த்தை பயன்படுகிறது..
ஒரு டிஜிட்டல் படத்தின் அளவானது பொதுவாக அப் படத்தின் நீளம் மற்றும் அகலத்தின்
பெருக்கமாக எடுத்துரைக்கப்படும் (உதாரணம் : 640 x 480 பிக்சஸ்) ஒரு மெகா பிக்சல் (Megapixel) என்பது ஒரு மில்லியன் பிக்சல்களைக் குறிக்கும்.
ஒரு டிஜிட்டல் கேமராவின் தெளிவுத் திறன் மெகா பிக்சலிலேயே எடுத்துரைக் கப் படும்.
ஒரு
டிஜிட்டல் படத்தை உருவாக்கும் பிக்சல்களின் எண்னிக்கை அதிகமாயிருப்பின் அந்தப்
படம் திரையிலும் அச்சு வடிவிலும் தெளிவாகத் தோன்றும். அதிக என்ணிக்கையிலான்
பிக்ஸல் கொண்டு ஒரு படம் உருவாக்கப்படுமாயின் அது உயர் ரெஸலுயூஸன் (High Resolution) கொண்ட படமாகக்
கருதப்படும்.
-அனூப்-