404 Not Found - explained

404 Not Found  எதற்கு இந்தப் பிழைச் செய்தி

ஒரு இணைய தளத்தை பார்வையிடுகையில் அவ்வப்போது சில பிழைச் செய்திகளையும் பிரவுஸர் காண்பிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவற்றுள் பொதுவான ஒரு பிழைச் செய்திதான் 404 Not Found. என்பதாகும். வெப் சேர்வரில் இல்லாத ஒரு இணைய பக்கத்தைப் பார்வையிட முயற்சிக்கும் போதே  இந்தப் பிழைச் செய்தி யைக் காண்பிக்கும். அதாவது அந்தப் பக்கம் சேர்வரிலிருந்து அகற்றப் பட்டிருக்கலாம் அல்லது எட்ரஸ் பாரில் தவறான முகவரி டைப் செய்திருக்கலாம். இந்த பிழைச் செய்தி சேர்வரினால் பிரவுஸருக்கு அனுப்பப் படுகிறது. இப்பிழைச் செய்தி தோன்றும் போது எட்ரஸ் பாரில் நீங்கள் டைப் செய்திருக்கும் முகவரி சரியானதா என உறுதி செய்து கொள்ளுங்கள். முகவரி சரியாயிருப்பின் அந்தப் பக்கம் அகற்றப் பட்டிருப்பது உறுதி.


சரி.. காரணம் எதுவாகவும் இருக்கட்டும். எதற்கு இந்த 404 எனும் பெயர்? ”வெப் பக்கத்தைக் காணவில்லைஎனும் செய்தி மட்டும் போதாதா எனக் கேட்கத் தோன்றுகிறதா? 404 என்பது ஒரு இணைய பக்கம் காணப்படாத விடத்து வெப் சேர்வரினால் உருவாக்கப் படும் ஒரு  சங்கேதக் குறியீடு. இந்தக் குறியீட்டை சேர்ச் என்ஜின் எனும் தேடற் பொறிகள் இனம் கண்டு தவறான அந்தப் பக்கம்  தமது தரவுத் தளத்தில் இடம் பெறா வண்ணம் பாதுகாக்கின்றன. மேலும் இனைய தள வடிவமைப்பாளர்களுக்கும் தமது இணைய தளத்திலுள்ள தவறான இணைப்புக்களைச் சரி செய்யவும்  இந்தப் பிழைச் செய்தி உதவுகின்றது.

அனூப்