How to get a Screen Shot in MS Windows


திரையில் காண்பதைப் பிரதி செய்வோமா?


விண்டோஸ் இயங்கு தளம் நிறுவியுள்ள ஒரு கணினியில் கணினி திரையில் காணும் எந்த ஒரு படத்தையும் ஒரு இமேஜ் பைலாக சேமித்துக் கொள்வதென்பது மிக இலகுவான ஒரு செயற்பாடு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

கீபோர்டில் ப்ரின்ட் ஸ்க்ரீன் (PrintScreen) விசையை ஒரு முறை அழுத்துங்கள். அப்போது திரையில் காணும் படம் விண்டோஸ் க்ளிப்போர்டில் கொப்பி செய்யப்படும். (இதே க்ளிப்போர்ட்தான் கொப்பி பேஸ்ட் கமாண்ட் மூலம் பிரதி செய்யும் செயற்பாட்டுக்கு உதவுகிறது.)

அடுத்து க்ளிப்போர்டில் உள்ளதை ஒரு பைலாக சேமித்துக் கொள்ள வேண்டும்,. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஏதேனும் ஒரு கிரபிக்ஸ் அல்லது போட்டொ எடிட்டிங் மென் பொருள் ஒன்றைத் திறந்து கொள் ளுங்கள். உங்கள் கணினியில் போட்டோ எடிட்டிங் மென்பொருள் இல்லையானால் எம்.எஸ்.பெயிண்ட் மென்பொருளைத் திறந்து கொள்ளுங்கள். எம்.எஸ் .பெயிண்டில் (Edit) எடிட் மெனுவில் பேஸ்ட் (Paste) க்ளிக் செய்யுங்கள். அப்போது திரையில் தெரிந்த அந்தப் படம் பெயிண்ட் விண்டோவில் ஒரு இமேஜ் பைலாக தோன்றக் காணலாம். அதனை ஒரு .jpg பைலாக சேமித்துக் கொள்ளலாம்.

திரையில் காணும் ஒரு விண்டோவை அல்லது டயலொக் பொக்ஸை இமேஜ் பைலாக சேமித்துக் கொள்ள வேண்டுமானால் கீபோட்ர்டில் Alt மற்றும் PrintScreen கீ இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்துங்கள். இது தவிர திறந்திருக்கும் ஒரு விண்டோவில் வெவ்வேறு பகுதிகளை உதாரணமாக மெனு பார், டூல் பார், கண்டெக்ஸ்ட் மெனு போன்றவற்றையும் தனித் தனியாயாக இமேஜ் பைலாக சேமித்துக் கொள்ளலாம். எனினும் இதற்கு விண்டோஸில் வசதியில்லை. அதற்கு Snag It, Screen Swift எனப் பல மென்பொருள்கள் பாவனையில் உள்ளன.

-அனூப்-