How to connect two monitors to a single PC?

ஒரே கணினியில் இரண்டு  மொனிட்டர்களை இணைப்பது எப்படி?

ஒரே கணினியில் இரண்டு மொனிட்டர்களைப் பொருத்திப் பணியாற்றுவது ஒன்றும் புதிய விடயமல்ல. ஒரே கணினியில் இரண்டுக்கு மேலும் மொனிட்டர்களைப் பொருத்திக் கொள்ளலாம். எனினும் அந்த தொழில் நுட்பம் பற்றி அனேகர் அறிந்திருப்பதில்லை. மொனிட்டர்களில் விலை சரிந்து வரும் நிலையில் இரண்டு மொனிட்டர்களைப் பொருத்திப் பயன்படுத்துவதும் அதிக செலவை ஏற்படுத்தி விடாது. அத்தோடு அதனைப் பொருத்துவதும் கூட ஒரு இலகுவான வேலைதான்.

ஒரு கணினியில் இரண்டு மொனிட்டர்களைப் பொருத்துவதனால் என்ன பயன்?

டிஜீட்டல் புகைப்படங்களை அதிக அளவில் கையாளும்போது கணினித் திரை போதியதாக இருக்காது.. அதற்குத் தீர்வாக அளவில் பெரிய திரை கொண்ட ஒரு மொனிட்டரை வாங்கிப் பொருத்தலாம். ஆனால் அதனை விட இன்னுமொரு ,மொனிட்டரை வாங்கி இரண்டு மொனிட்டர்களையும் ஒரே நேரத்தில் பயன் படுத்தலாம். அதன் மூலம் நீங்கள் பணியற்றும் டெஸ்க்டொப்;பின் அளவை இரட்டிப்பாக்கலாம்.

அதேபோல் ஒரு கண்னித் திரையில் விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் போன்ற ப்ரோக்ரம் கொண்டு டிஜிட்டல் படங்களை சிறிய அளவில் (thumbnail) தேடிக் கொண்டே அடுத்த மொனிட்டர் திரையில் அதே படத்தை பெரிய அளவில் தோன்றச் செயது போட்டோ ஷொப் போன்ற மென்பொருளில் அப் படங்களை எடிட் செய்யலாம்.

AutoCAD போன்ற வரை கலை மென்பொருள்களில் பணியாற்றுவதற்கு கணினித் திரையில் அதிக இடம் தேவைப்படும். இரட்டை மொனிட்டர்களைப் பயன் படுத்தும் போது டூல் பார்களை இரண்டாவது மொனிட்டருக்கு நகர்த்தி விட்டு அதிக இட வசதியுடன் கூடிய இரண்டாவது மொனிட்டரில் படங்களை வரையலாம்.

முதலாது மொனிட்டரை இணைய பயன்பாட்டிற்கும் இரண்டாவது மொனிட்டரை வீடியோ படங்களைப் பர்ர்க்கவும் பயன் படுத்தலாம் அதேபோல் தற்போது கணினி விளையாட்டுக்களும் இரண்டு மொனிட்டர்களில் விளையாடுவதற்கு ஏற்றவாறு உருவாக்கப்படுள்ளன. Unreal Tournament, Quake போன்ற கணினி விளையாட்டுக்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இவ்வாறு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பணிகளில் ஈடுபடும் போது அவற்றிற்குரிய இரண்டு விண்டோகளையும் இரண்டு மொனிட்டர்களில் தனியாகத் திறந்து கொண்டு கணினியில் சௌகரியமாகப் பணியாற்றக் கூடிய வசதி இரண்டு மொனிட்டர்களைப் பயன் படுத்துவதனால் கிடைக்கிறது.

தற்போது வெளிவரும் நவீன டெஸ்க் டொப் கணினிகள் இரண்டு மொனிட்டர் களைப் பொருத்தக் கூடியவாவறு உரிய வன்பொருள் சாதனங்களுடன் கிடைக்கின்றன. உங்கள் டெஸ்க்டொப் கணினியின் பின் புறம் இரண்டு மொனிட்டர்களை இணைக்கக் கூடியவாறு இரண்டு Video Graphics Array (VGA) கனெக்டர்கள், அல்லது இரண்டு Digital Visual Interface (DVI) கனெக்டர்கள் அல்லது VGA, DVI இரண்டும் சேர்ந்த கனெக்டர்கள் உள்ளனவா எனப் பாருங்கள்.

உங்கள் கணினியில் ஒரே ஒரு VGA அல்லது DVI கனெக்டர் மாத்திரமே இருப்பின் இரண்டாவது மொனிட்டரை இணைப்பதற்கு மற்றுமொரு வீடியோ அடெப்டரைப் (Video Adapter) பொருத்த வேண்டியிருக்கும். அல்லது தற்போதுள்ள் வீடியோ அடெப்டருக்குப் பதிலாக இரண்டு VGA அல்லது இரண்டு DVI கனெக்டர் இணைந்த ஒரு வீடியோ அடெப்டரைப் பொருத்திக் கொள்ளலாம்., வீடியொ அடெப்டரைப் பொருத்துவதோடு அதற்குரிய ட்ரைவர் மென்பொருளையும் நிறுவிக் கொள்ள வேண்டும். .

அண்மைக் காலங்களில் தயாரிக்கபபட்டு வெளிவரும் மடிக் கணினிகளிலும் மேலதிகமாக ஒரு மொனிட்டரை இணைப்பதற்கென ஒரு VGA அல்லது DVI கனெக்டர் இணைக்கப்படுள்ளது.. அதன் மூலம் மடிக்கணினியுன் இணைந்து வரும் திரைக்கு மேலதிகமாக இரண்டாவது மொனிட்டரைப் பயன் படுத்தலாம். மடிக் கணினிகளில் வ்ரும் மேலதிக கனெட்க்டரில் மல்டி மீடியா ப்ரோஜ்ரெக்டரும் இணைக்கப் படுவதுண்டு,

இவ்வாறு எதோ ஒரு வழியில் இரண்டு கணினித் திரைகளையும் இணைத்த் பிறகு கணினியில் சிறிய மாற்றத்தைச் செய்ய வேண்டும்.

விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டோஸ் செவன் பதிப்புகள் இரண்டு மொனிட்டர்களைக் இணைக்கக் கூடிய வசதினைக் கொண்டுள்ளன. விண்டோஸ் செவன் பதிப்பில் இரண்டு மொனிட்டர்களை இல்குவகாகக் கையாளும் வகையில் மேம்பட்ட விசேட மென்பொருள் இணைக்கப்படுள்ளது.
விண்டோஸ் செவன் இயங்கு தளத்தில் இரண்டு மொனிடர்கலையும் செயற்பட வைப்பதற்கு டெஸ்கொப்பில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Screen Resolution தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் இரண்டு மொனிட்டர்களையும் 1, 2 என இலகக்ம் மூலம் கண்பிக்கப்படும்.

இங்கு இலக்கம் ஒன்று மற்றும் இரண்டினால் குறிகப்படுவது எந்த மொனிட்டர் என்பதை இனம் காண்பதற்கு அந்த டயலொக் பொக்ஸில் Identify பட்டனில் க்ளிக் செய்யுங்கள். பின்னர் Multiple Displays எனுமிடத்தில் கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக். செய்து Duplicate these Displays, Extend these Displays, Show Desktop only on 1, Show Desktop only on 2 விரும்பியதைத் தெரிவு
செய்யலாம்.


இரண்டு மொனிட்டர்களையும் காண்பிக்கா விட்டால் விண்டோஸ் ஏதோவொரு மொனிட்டரை இனம் காணவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதற்குத் தீர்வாக உரிய வீடியோ ட்ரைவர் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா எனவும் இரண்டாவது மொனிட்டர் முறையாக இணைக்கப்பட்டுள்ளதா பொன்ற விடயங்களை உறுதி செய்து கொண்டு Detect பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

இரண்டு மொனிட்டர்களிலும் ஒரே காட்சியைப் பெறுவதற்கு டிஸ்ப்லே செட்டிங்கில் Duplicate these Displays, என்பதனையும் ஒரு மொனிடரில் டெஸ்க்டொப்பையும் மற்றையதில் வேறு விண்டோக்களையும் திறப்பதற்கு Extend these Displays என்பதனையும் தெரிவு செய்ய வேண்டும். இந்த Extend நிலையில் திறக்கப்படும் ஒரு விண்டோவை டைட்டில் பாரில் க்ளிக் செய்து வலப்புறமோ இடப்புறமோ நகர்த்தும் போது இரண்டாவது மொனிட்டரில் அந்த விண்டோ தோன்றுவதைக் காணலாம்.

விண்டோஸ் செவன் பதிப்பில் வின்கீயுடன் P எழுத்தை அழுத்தும்போது படத்திலுள்ளவாறு ஒரு மெனு தோன்றும் . அதிலிருந்து விரும்பியதைத் தெரிவு செய்யலாம்.

இரண்டு மொனிட்டர்களைத் தொடர்ந்து பயன் படுத்த விரும்பினால் இரண்டிலும் அரே அளவிலான காட்சித் தெளிவினைக் கொணடதாக வைத்திருங்கள். ஏனெனில் இரண்டு மொனிட்டர்களையும் அடிக்கடி மாறி மாறிப் பார்க்கும்போது அவற்றில் சீரான காட்சி இல்லாத போது கண்களில் அழற்சியை உண்டாக்கலாம்.

எப்போதும் ஒரே மொனிட்டருடன் பணியாற்றிச் சலித்துப் போனவர்கள் ஒரு முறை வசதி கிடைத்தால் இரண்டு மொனிட்டர்களைப் பொருத்திப் பணியாற்றிப் பாருங்கள். இவ்வளவு காலம் இப்படியொரு விடயம் இருப்பதைத் தெரிந்து கொள்ளாமல் விட்டோமே என நிச்சயம் வருத்தப்படுவீர்கள்.


-அனூப்-