To move your installed applications - Steam Mover


நிறுவிய மென்பொருளை இடமாற்றம் செய்ய Steam Mover


விண்டோஸ் இயங்கு தளத்தில் ஒரு எப்லிகேசனை நிறுவும் போது எந்த ட்ரைவில் அல்லது போல்டரில் நிறுவ வெண்டும் என வினவும். அப்போது நாம் விரும்பும் ட்ரைவை போல்டரை காண்பிக்க குறித்த போல்டரில் அந்த எப்லிகேசன் நிறுவப்படும். அவ்வாறு நாங்கள் போல்டரைக் காண்பிக்காத விடத்து C:\ ட்ரைவிலுள்ள Program Files போல்டரில் அந்த எப்லிகேசன் நிறுவப்படும். அனேகமாக அனைத்து எப்லிகேசன்களும் இந்த Program Files எனும் போல்டரிலேயே நிறுவப்படும். இவ்வாறு அதிக எப்லிகேசன்களை நிறுவும் போது C:\ ட்ரைவ் நிரம்பி விடும். அதனால் ட்ரைவில் போதிய இடமில்லை எனவும் எனவே சில பைல்களை நீக்கிவிடுமாறும் எச்சரிக்கைச் செய்தியை விண்டோஸ் அடிக்கடி காண்பித்துக் கொண்டேயிருக்கும்.


சாதாரண பைல் போல்டர்களை இடமாற்றம் செய்வது போல் Program Files போல்டரிலுள்ள எப்லிகேசன்களுக்குரிய பைல் மற்றும் போல்டர்களை இடமாற்றம் செய்ய முடியாது. அவ்வாறு போல்டர்களை இடம் மாற்றி விட்டால் அல்லது அழித்து விட்டால் குறித்த எப்லிகேசன் இயங்காமல் போய் விடும். இவ்வாறான நிலைமைகளில் எமக்குக் கை கொடுக்கிறது Steam Mover எனும் சிறிய யூட்டிலிட்டி. இதன் மூலம் C:\ ட்ரைவிலுள்ள எப்லிகேசனை D:\ அல்லது E:\ ட்ரைவ்களுக்கு எப்லிகேசனுக்கு எந்த பாதிப்புமில்லாமல் இலகுவாக இடமாற்றம் செய்து விடலாம். இந்த Steam Mover மென்பொருள் கருவி விண்டோஸின் விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் சிறப்பாக இயங்குகிறது . எனினும் எக்ஸ்பீயில் இயங்காது. இதனை http://www.softpedia.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

-அனூப்-