Team Viewer - Remote Control



விண்டோஸில் இணைந்து வரும் ரீமோட் டெஸ்க்டொப் (Remote Desktop) அறிந்திருப்பீர்கள். அதாவது வீட்டிலிருந்து கொண்டே உங்கள் அலுவலகக் கணினியுடன் இணைந்து அக்கணினியிலுள்ள ஹாட் ட்ரைவ், பைல், போல்டர் மற்றும் ஏனைய புரோக்ரம்களை திறந்து பணியாற்ற முடிவதோடு நிஜமாகவே உங்கள் காரியாலயக் கணினி முன்னால் உட்கார்ந்து பணியாற்றுவது போன்ற உணர்வை இந்த ரீமோட் டெஸ்க்டொப் தருகிறது.

தொலைவிலுள்ள கணினியை அணுகுவதற்குப் பயன்படும் ரீமோட் டெஸ்க்டொப் போன்ற மற்றுமொரு மென்பொருள் கருவியே டீம் வீவர். (Team Viewer) இது விண்டோஸ் ரீமோட் டெஸ்க்டொப்பை விட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
  • டீம் வீவர் மூலம் ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகலாம்.
  • உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பை மறு முனையில் இருப்பவருக்கும் அதேபோல் அவரது கணினியின் டெஸ்க்டொப்பை உங்கள் கணினிலும் தோன்றச் செய்யலாம்.. இதன் மூலம் கணப்பொழுதில் படங்களையோ அல்லது பிரசன்டேசன் ஒன்றையோ தொலைவிலுள்ளவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
  • தொலைவிலுள்ள நண்பரைக் கொண்டு உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள வன்பொருள் மற்றும் மென்பொருள் சிக்கலை அவரிடத்திற்கு நேரில் செல்லாமல் உங்கள் வீட்டிலிருந்தபடியே சரி செய்து கொள்ளலாம்.
  • அதிக கொள்ளளவு கொண்ட பைல்களை இலகுவாகவும் விரைவாகவும் பரிமாறிக் கொள்ளலாம்.  
இது போன்ற ஏராளமான தேவைகளுக்கு துணை புரிகிறது. ரீமோட் கண்ட்ரோல் மென்பொருள் கருவியான டீம் வீவர்

விண்டோஸ் ரீமோட் டெஸ்க்டொப் வசதியைப் பயன்படுத்த இரண்டு கணினிகளிலும் பல் வேறு விதமான செட்டிங்ஸ் மாற்றியமைக்க வேண் டும்எனினும் டீம்வீவரை மிக எளிதாக எவரும் பயன் படுத்தலாம். எந்த விதமான மாற்றங்களும் கணி னியில் செய்யாமல் டீம் வீவரை நிறுவியதுமே பயன் படுத்த ஆரம் பிக்கலாம். இங்கு போட் இலக்கமோ (Port) ஐபி முகவரிகளோ வழங்க வேண்டியதில்லை..

டீம்வீவர் மென்பொருளை பயன் படுத்த இரண்டு முனைகளிலும் டீம்வீவரை நிறுவி இயக்க வேண்டும். அப்போது உங்கள் கணினிக்கென ஒரு இலக்கமும் கடவுச் சொல்லும் தரப்படும். எதிர் முனையிலும் அவ்வாறே தரப்படும். இந்த லொகின் விவரங்களை இரண்டு கணினிகளிலும் பரிமாறிக் கொண்ட பின் இனைப்பை உருவாக்கி நீங்கள் விரும்பும் வசதியை செயற்படுத்த முடியும்.

டீம் வீவர் மென்[பொருள் கருவியை தனிப்பட்ட பாவனைக்கு இலவசமாகப் பயன் படுத்தலாம். எனினும் வணிக நோக்கில் பயன் படுத்துவோர் அதற்குத் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதன் மூலம் டீம் வீவரின் பிற சேவைகளையும் பெறலாம். குறிப்பாக பைல் பரிமாற்றம்., பல பேருடம் குழுவாக இணைந்து ஓன் லைனில் பணியாற்றல், ஓடியோ மற்றும் வீடியோ செட் போன்ற சேவைகளைப் பெறலாம். .

TeamViewer 6 எனும் புதிய பதிப்பு பல வசதிகளைக் கொண்டுள்ளது. 2.9 எம்பி அளவு கொண்ட இதனை www.teamviewer.com எனும் இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்

டீம் வீவரைப் பயன் படுத்தி எங்கோ ஓரிடத்திலிருந்து கொண்டு உங்கள் வீட்டுக் கணினியையோ அல்லது அலுவலகக் கணினியையோ அணுகி அதனை எமது கட்டுப் பாட்டில் இயக்கும் போது ஒரு புதுமையான அனுபவத்தை உணர முடியும்.

-அனூப்-