Google Desktop
கூகில் டெஸ்க்டொப்

பயன்படுத்துவதற்கு எளிமையான இடை
முகப்பைக் கொண்டுள்ள கூகில் டெஸ்க்டொப் கருவி
1968 KB அளவு கொண்டது. இதனை நீங்கள் ஒரே
நிமிடத்தில் கணினியில் நிறுவி விடலாம். இதனை
நிறுவியதும்
டெஸ்க்டொப்பில் வலது புறம் காட்சியளிக்கும். எனினும் நீங்கள் அதனை விருப்பம் போல் டெஸ்டொப்பின் இடது புறமோ அல்லது டாஸ்க் பாரிலோ நிறுத்தலாம். இது விண்டோஸ் விஸ்டா மற்றும் செவன் பதிப்புக்களில் வரும் சைட் பாருக்கு ((Side
Bar) நிகரானது. இந்த சைட் பாரில் ரைட் க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பும் பணிகளை மெற்கொள்ளலாம்.
மிக எளிமையாகப் பயன் படுத்தக் கூடியவாறு கூகில் டெஸ்க்டொப்பின் இடை முகப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சைட் பாரிலிருந்தே கூகில் தளத்தில் உங்கள் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
சைட் பாரில் ரைட் க்ளிக் செய்து Add gadgets தெரிவு செய்யும்போது புதிதாக ஒரு விண்டோ தோன்றி கூகில் மற்றும் பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட கருவிகளை (gadgets) வெவ்வேறு தலைப்புக்களின் கீழ் பட்டியலிடக் காணலாம். அவற்றுள் விரும்பியதைத் தெரிவு செய்து கூகில் டெஸ்க்டொப்பில் இணைத்துக் கொள்ள முடியும்.
கூகில் டெஸ்க்டொப்ஒரு இலவச யூட்டிலிட்டி, இது விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புக்களில் சிறப்பாக இயங்குகிறது. இதனை நீங்கள் desktop.google.com எனும் தளத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம்.
-அனூப்-
-அனூப்-
Post Comment