What is CMS
CMS என்றால் என்ன?

வேறு வகையில் கூறுவதானால் ஒரு தரவுத் தளத்துடன் இணைக்கப்பட்ட பல தொடர்ச்சியான ப்ரோக்ரமிங் பக்கங்களை சீ.எம்.எஸ் எனப்படுகிறது.. இதிலிருந்து தகவல்களை இலகுவாக மீளப் பெறலாம்.

உள்ளடக்க நிர்வாக முறைமை என்றால் என்ன என்பதை நீங்கள் இதுவரை அறிந்திராவிட்டாலும் அதனைப் பயன் படுத்திய அனுபவம் உங்களுக் கிருக்கலாம். உதாரணமாக சமூக வலையமைப்புத் தளமான பேஸ்புக்கில் (Facebook) உங்கள் தகவல்களைப் புதிதாக சேர்த்திருப்பீர்கள். ப்லோக் (Blog) எனும் வலைப் பதிவில் புதிதாக ஆக்கங்களை இட்டிருப்பீர்கள். eBay போன்ற தளங்களில் ஏதேனும் ஒரு பொருளை ஏலத்தில் எடுத்திருப்பீர்கள்.. ஜிமெயில் போன்ற மின்னஞ்சல் சேவையைப் பயன் படுத்தியிருப்பீர்கள். இவையனைத்தும் உள்ளடக்க நிர்வாக முறைமையின் படியே இயங்குகின்றன,
இணைய தளம் ஒன்றின் உள்ளடக்கத்தை நிர்வகிக்கப் பயன் படும் இலகுவான ஒரு முறைமையே Web Content Management System எனப்படுகிறது. இதற்கு உதாரணமாக Joomla, Drupal, Wordpress போன்ற மென்பொருள்களைக் குறிப்பிடலாம. இவை தவிர இன்னும் ஏரளமான இணைய தள உள்ளடக்க நிர்வாக மென்பொருள்கள் பயன் பாட்டில் உள்ளன. இவை இணைய தளங்கள் பராமரிக்கப்படும் ஹோஸ்ட் கணினியிலேயே நிறுவப்படும்.. இதன் மூலம் வேறு மென்பொருள்கள் எதனையும் நிறுவாமல் இணைய தளமொன்றின் உள்ளடக்கத்தை வெப் பிரவுசர் எனும் இணைய உலாவியைக் கொண்டே இலகுவாக நிர்வகிக்கலாம். அதாவது இணைய தளத்திலுள்ள ஒரு பக்கத்தை மாற்றியமைக்க விரு்ம்பின் பிரவுசர் கொண்டே அதனை மாற்றி சேமித்த பின்னர் உடனடியாக அந்தப் பக்கத்தை இணையத்தில் புதுப்பிக்கவும் முடிகிறது. .
சீ.எம்.எஸ் மூலம் ஒரு இணைய தளத்தில் படங்கள், ஒலிக்கோப்புகள், சலனப் படங்கள், பீடிஎப் பைல்கள் போன்ற எல்லா விதமான ஆவணங்களும் முறையாக வகைப் படுத்தப்பட்டு. இணைய தள பக்கங்களிடையே இணைப்புகளை (hyperlinks) இடலாம். மேலும் படிவங்கள் (forms) ஒளிப்பட கோர்வைகள் (image galleries), கருத்துக் களம் (forums), கருத்துக் கணிப்புகள் (polls), தேடு பொறிகள் (search engines), அன்றாட செய்திக் குறிப்புகள் (news) போன்ற இணைய தளமொன்றில் காணப்படும் அனைத்து அம்சங்களையும் இலகுவாக நிர்வகிக்க முடியும்.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த வெப் கண்டெண்ட் மேனேஜ்மண்ட் பயன் படுத்தி வெப் டிசைனர், ப்ரோக்ரமர் போன்றவர்களின் உதவியின்றி உங்கள் நிறுவன இணைய தளங்களை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளவும் அவ்வப்போது பக்கங்களைப் புதுப்பிக்கவும் முடிகிறது. இணைய தள வடிவமைப்பில் பயன் படுத்தப்படும் HTML, PHP போன்ற இணைய வடிவாக்க மொழிகளில் தேர்ச்சியற்றவர்களும் சாதாரண வர்ட் ப்ரோஸெஸ்ஸிங் (Word Processing) அறிவுடன் இணைய தளங்களை உருவாக்கலாம். அத்தோடு இதன் மூலம் இயங்கு நிலையிலுள்ள (Dynamic Websites) இணைய தளங்கள் உருவாக்கப்படுவது மற்றுமொரு சிறப்பம்சமாகும்
மேலும் ஏற்கனவே பதிப்பித்த இணைய உள்ளடக்கம் பாதிப்புறா வண்ணம் புதிதாக ஒரு இணணய தளம் உருவாக்காமலேயே அதற்கொரு புதிய தோற்றத்தினை வழங்கவும் முடியும். . இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை இணைய தள உள்ளடக்க நிர்வாக மென்பொருள்கள் கொண்டுள்ளன.
-அனூப்-
Post Comment