Windows search techniques

விண்டோஸ் தரும் தேடல் வசதி

விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் தேடற் கருவியானது விண்டோஸில் உள்ள ஒரு சிறப்பம்சம் எனலாம். விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு போலல்லாமல் விஸ்டா மற்றும் செவன் பதிப்புக்களில்  இணைய தேடலில் உதவும் கூகில் இன்ஸ்டன்ட் போன்று தேடல் வார்த்தையை டைப் செய்யும்போதே தேடல் முடிவுகளை விண்டோஸ் காண்பிக்கிறது. விண்டோஸ் தேடற் கருவி உங்கள் ஆவணம் மின்னஞ்சல் படங்கள் வீடியோ  மற்றும் எப்லிகேசன்களை உடனடியாகத் தேடித் தருகிற்து.

விண்டோஸ் தேடல் கருவியை உங்கள் கணினியில் ஸ்டாட் மெனு, விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் மற்றும் Windows key + F விசைகளை ஒன்றாக அழுத்தவது போன்ற பல வழிகளில்; அனுகலாம். இங்கு இறுதியாகக் குறிப்பிடப்பட்ட முறை சிறந்ததெனலாம். காரணம் பைல்களைத் தேடுவ தற்கென தனியாக ஒரு விண்டோவைத் திறப்பதுடன்  தேடல்  உதவிகளையும் காண்பிக்கும்.

சில உதாரணங்கள்

1. தேடல் விண்டோவில் test என வழங்கும் போது test எனும் சொல்லைப் பெயராகக் கொண்ட பைல் மற்றும் போல்டர்களையும் அச்சொல் அடங்கியுள்ள அனைத்து பைல்களையும் காண்பிக்கும்.

2. ext:ppt test 
என
வழங்கும் போது வநளவ   எனும் சொல்லைப் பைல் பெயராகக் கொண்ட ppt வகை பைல்களயும் அந்தச் சொல் அடங்கும் வேறு ppt பைல்களயும் தேடித் தரும் இங்கு ext என்பதற்குப் பதிலாக type,  dot (.) என்பவற்றையும் பயன் படுத்தலாம்.

 3. ext:ppt filename:sales
என வழங்கும் போது sales எனும் சொல்லைப் பைல் பெயராகக் கொண்ட ppt வகை பைல்களை மட்டுமே தேடும்பைல் உள்ளடக்கத்தில் தேடுவதில்லை.

4. ext:doc date:this week
என வழங்கும் போது இந்த வாரத்தில் சேமிக்கப் பட்ட doc வகையிலான பைல்களை மாத்திரம் தேடும். இங்கு this week"> என்பதற்குப் பதிலாக today, yesterday, last week, past month, a long time ago எனவும் வழங்கலாம்.

5. date:13-09-2010..24-09-2010 என வழங்கும் போது குறிப்பிட்ட இரண்டு திகதிகளுக்கிடையே சேமிக்கப் பட்ட பைல்களத் தேடிப் பெறலாம்.

6. kind:pictures 
என வழங்கும் போது கணினியிலுள்ள அனைத்து வகையான படங்களையும் தேடிக் காண்பிக்கும்.

7. kind:pictures date:23-09-2010
என வழங்கும் போது குறித்த திகதிக்குப் பின்னர் சேமிக்கப் பட்ட படங்களை மட்டும் தேடிப் பட்டியலிடும்.

8. Size:small 
என வழங்கும் போது  (10 முதல் 100 கிலோ பைட்  அளவு கொண்ட பைல்களைப் பட்டியலிடும். இங்கு small   என்பதற்குப் பதிலாக Medium. Large, Huge, Gigantic  என வழங்கும் போது வெவ்வேறு அளவு கொண்ட பைல்களைப் பட்டியலிடக் காணலாம்.

9. size:500MB..800MB 
என வழங்கும் போது 500 முதல் 800 மெகா பைட் அளவுகளுக்கிடை யிலான பைல்களைக் காண்பிக்கும்.

10. size:>500MB  
என வழங்கும் போது 500 MB  ற்கு மேற்பட்ட அளவு கொண்ட பைல்களை  மாத்திரம் பட்டியலிடும்.


இவ்வாறு விண்டோஸ் இயங்கு தளத்தில் உங்கள் கணினியிலுள்ள  பைல்களைத் தேடிப் பெறுவதில் பல இலகு வழிகள் உள்ளன.

-அனூப்-