What is the use of Fn Key?

Fn Key பயன்பாடு என்ன?

கணினி விசைப் பலகையில் F1 முதல் F12 வரை இலக்கமிடப் பட்டிருக்கும். Function விசைகளை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இவ் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பயன் பாட்டு மென்பொருள்களில் வெவ் வேறு பணிகளைச்செய்யும். அதே போன்று மடிக் கணினி விசைப் பலகையில் Fn எனும் ஒரு விசை,  விசைப் பலகையின் கீழ்ப் பகுதியில் இடது புறம் இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.  ஆனால் இந்த பயன் பாடு பற்றிப் பலரும் அறிந்திருப்பதில்லை.

இந்த Fn விசையும் ஒரு Function விசைதான்.. Fn  விசை ஒரு Shift மற்றும் Ctrl விசைகள் போன்றே செயற்படுகிறது.  அதாவ்து இந்த விசை தனித்து இயங்காமல் பிற விசைகளுடன் சேர்த்தே இயக்கப் படுகிறது. இவ்வாறான விசைகளை modifier விசை எனப்படுகிறது. . மேலும் இது  சில விசேட பயன் பாடுகளுக்கெ பயன் படுத்த்ப் படுகின்றது

இது கனினித் திரையின் பிரகாசத்தை அதிகரித்தல், குறைத்தல், கனினி ஒலிக் கட்டுப் பாடு, மல்டி மீடியா ப்ரோஜெகட்ர் இணைத்தல், வைபை இணைப்பை இயங்க வைத்தல் போன்ற விசேட பணிகளுக்காகப் பயன் படுத்தப் படும். இந்த Fn விசையுடன் இணைந்து இயங்கும் விசைகளை, மேலுள்ள Function விசைக்ளின் மீது கீழுப் பகுதியில்  அச்சிடப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த Fn விசையை அழுத்திய வாறே அவ்விசைகளை இயக்க வேண்டும்.  

-அனூப்-