What is IPv6?
IPv6 என்றால்
என்ன?

IPv6
இல் ஐபி முகவரிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவை சற்று சிக்கலானவைதான். IPv6 இல் ஒவ்வொரு ஐபி முகவரியும் hhhh:hhhh:hhhh:hhhh:hhhh:hhhh:hhhh:hhhh எனும் வடிவில் இருக்கும். இங்கு ஒவ்வொரு hhhh பகுதியும் நான்கு இலக்கத்திலான ஒரு பதினறும என்ணைக் (hexadecimal) குறிக்கின்றன. அதாவது இங்கு ஒவ்வொரு h எழுத்தும் 0 முதல் 9 வரையிலும் A முதல் F வரையிலும் அமையப் பெற்றிருக்கும். (உதாரணம் F704:0000:0000:0000:3458:79A2:D08B:4320)
IPv6 கொண்ட ஐபி முகவரிகள்
சிக்கலான வடிவில் இருந்தாலும் இம்முறையானது கணினிகளுக்கு சிறந்த பாதுகாப்பை
வழங்குகின்றது. மேலும் அதிக எண்ணிக்கையிலான ஐபி முகவரிகள் வழங்க முடிவதால் மற்றுமொரு
கணினியின் ஐபி முகவரியை யூகிப்பது அசாத்தியம்.

தற்போது
பயன் பாட்டிலுள்ள அனேக கணினிகள் IPv6 முறையை ஆதரிப்பதால்
விரைவில் புதிய இணைய நியதிகள் அமுலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் IPv6 ற்கு இன்னும் கணினிகள் முழுமையாக மாறவில்லையாயினும் தற்போது
இரண்டு முறைகளையும் பின்பற்றி கணினிகளுக்கு ஐபி முகவரிகள் வழங்கும் முறை பயன்
பாட்டில் உள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும். இன்னும் ஒரு சில வருடங்களில் IPv6 மட்டுமே பயன் பாட்டில்
இருக்கும்.
அனூப்
Post Comment