What is Megapixel?

மெகாபிக்ஸல் என்றால் என்ன?

மெகாபிக்ஸல் என்பது டிஜிட்டல் கேமராக்களின் தெளிவுத் திறனைக் (resolutionகுறிக்கப் பயன்படும் ஒரு சொல்லாகும். இங்கு பிக்ஸல் என்பது ஒரு படத்தை உருவாக்க உதவும் புள்ளிகளைக் குறிக்கிறது. பிக்ஸல்களின் எண்ணிக்கையையே ரெஸலுயூசன் எனப்படுகிறது. கிடையாகவும் நிலைக்குத்தாகவும் உள்ள பிக்ஸல்களின் பெருக்கமாக (640x480) இது எடுத்துரைக்கப்படும்.

ஒரு மில்லியன் (10 இலட்சம்) பிக்ஸல்களின் (pixelsஎண்ணிக்கையையே மெகா பிக்ஸல் எனப்படுகிறது. உதாரணமாக 7.2 மெகா பிக்ஸல் கேமரா என்பது அண்ணளவாக 7,200,000  பிக்ஸல்கள் கொண்டு ஒரு படத்தை உருவாக்கக் கூடியது. மெகாபிக்ஸல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கேமரா மேலும் தெளிவான படங்களை உருவாக்கும். எனவே ஒரு கேமராவைக் கொள்வனவு செய்யும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய சிறப்பியல்பாக  மெகாபிக்ஸல்களின் எண்ணிக்கையும் கருதலாம்.

ஒரு கேமராவின் மெகாபிக்ஸல் எண்ணிக்கையானது கேமராவில் பொருத்தியுள்ள உணரியின் மூலம் பெறப்படும் நிலைக்குத்தான பிக்ஸல்களின் எண்னிக்கையினதும் கிடையாகவுள்ள பிக்ஸல்களின் எண்ணிக்கையினதும் பெருக்கத்தின் மூலம் அளவிடப் படுகிறதுஉதாரணமாக ஒரு டிஜிட்டல் கேமரா நிலைக்குத்தாக 2048 பிக்ஸல்களையும் கிடையாக  3072 பிக்ஸல்களையும் உருவாக்குகிறது. அதாவது மொத்தம் 6,291,456 (2048x3072) பிக்ஸல்களை உருவாக்கிகிறது. எனவே அதன் தெளிவுத் திறன் 6.3 மெகாபிக்ஸல் என நிர்ணயிக்கப் படுகிறது.

டிஜிட்டல் கேமராக்களை சந்தைப்படுத்தும் போது  மெகாபிக்ஸல் எனும் பதமே பயன்படுத்தப் படுகிறது6,291,456 பிக்ஸல்கள் என்பதை விட 6.3 மெகாபிக்ஸல் என்பதை  இலகுவாக உச்சரிக்கவும் நினைவில் கொள்ளவும் முடிகிறது.

ஒரு கேமராவில் மெகா பிக்ஸலின் அளவு முக்கியமானதாயிருந்தாலும் சட்டர் வேகம் ((shutter speed) படம் பிடிக்கும் முறை (shooting modes) ஆரம்பிக்கும் நேரம் (start-up time)  ஒளியின்  தரம் (flash quality) நிறங்களின் திருத்தம் (color accuracyஆகிய விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

மெகாபிக்ஸலின் அளவு மிக அதிகமாயிருந்தாலும் படம் மங்களாகவும் நிறத்தின் அளவு குறைந்ததாகவுமிருப்பின் படம் தரமற்றுப் போய் விடும். எனவே உயர்ந்த தரத்துடன் படம் ஒன்றை எடுக்க மேற் சொன்ன ஏனைய காரணிகளிலும் அதிக கவனம் செலுத்தல் அவசியம்.

அனூப்