எண்ட்ரொயிட் பக்கம் - REMOTE MOUSE
உங்கள் கையடக்கத் தொலைபேசியை மவுஸாக மாற்றி கணினியை தொலைவிலிருந்து இயக்கக் கூடிய வசதியைத் தருகிறது REMOTE MOUSE
எனும் அண்ட்ரொயிட் எப்பலிகேசன். இந்த எப்லிகேசன் மவுஸாக மாத்திரமன்றி விசைப் பலகையாகவும் உங்கள் ஸ்மாட் போனை தொழிற்பட வைக்கிறது. இதற்கு உங்களிடம் வைபை இணைப்பு இருத்தல் அவசியம்.
இந்த வசதியைப் பெற முதலில் கூகில் ப்லே ஸ்டோரிலிருந்து REMOTE
MOUSE எப்லிகேசனை நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கணினியிலும் http://www.remotemouse.net எனும் இணைய தளத்திலிருந்து ரீமோட் மவுஸ் சேர்வர் அப்லிகேசனை நிறுவிக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கணினியையும் ஸ்மாட்போனையும் ஒரே வைபை இணைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கணினியிலும் ஸ்மாட்போனிலும் ரீமோட் மவுஸ் அப்லிகேசனை இயக்கி வைபை இணைப்பினூடாக இரண்டு சாதனங்ககளையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது
ஸ்மாட்போனை ஒரு வயர் இல்லாத மவுஸாக (wireless) பயன் படுத்தி கணினியை
இயக்க முடியும். வழமையான
மவுஸிலுள்ள பட்டன்களின் செயற்பாடுகளை கையடக்கத் தொலைபேசியில் எவ்வாறு கையாள்வதென்பதை ஆரம்பத்திலேயே ரீமோட் மவுஸ் எப்லிகேசனில் காண்பிக்கும்.
இந்த REMOTE
MOUSE எப்லிகேசன் அண்ட்ரொயிட் கருவிகளுக்கு மட்டுமன்றி ஐபோன் தொலைபேசிக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
அனூப்