What is ICANN?
ICANN என்றால என்ன?
ICANN (ஐகான்) என்பது இணையத்தில் இணைந்துள்ள கணினிகளுக்கான ஐபி முகவரிகளை (IP addresses) ஒதுக்கீடு செய்வதற்கும் இணையதளப் பெயர்களை (domain name system) நிர்வகிப்பதற்கும் என உருவாக்கப் பட்டுள்ள ஒரு வணிக நோக்கற்ற நிறுவனமாகும். Internet Corporation For Assigned Names and Numbers என்பதே ICANN என்பதன் விரிவாக்கமாகும்.

ஐகான் நிறுவனம் அமெரிக்க நாட்டில் தனது தளத்தைக் கொண்டிருந்தாலும் அது ஒரு உலகலாவிய இணைய சமூகமாகும். பொதுவாக குறிப்பிட்டால் இணையத்தில் வரையறைகளை நிர்ணயித்து அதன் மேம்பாட்டிற்காக இயங்கி வரும் ஒரு நிறுவனமே ஐகான் ஆகும்.
அனூப்
Post Comment