How to hide a drive?

ட்ரைவ் ஒன்றை மறைத்து வைக்க...

உங்கள் கணினியில் உள்ள பைல்களை பிறர் பார்வையில் படாதபடி  மறைத்து வைப்பது போன்று ட்ரைவ்களையும் மறைத்து வைக்கலாம். இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட பைல்களை எவரும் அனுகாமல் பாதுகாக்கலாம். இந்த வசதி விண்டோஸ் இயங்கு தளத்தின் அனைத்து பதிப்புகளிலும் கிடைக்கிறது.

ட்ரைவ் ஒன்றை மரைத்து வைப்பதற்கு  முதலில் ஸ்டாட் மெனுவில் ரன் தெரிவு செய்யுங்கள். அல்லது WinKey+ R விசைகளை ஒரே நேரத்தில்  அழுத்துங்கள். வரும் ரன் பொக்ஸில் diskpart என டைப் செய்யுங்கள். அப்போது கமாண்ட் ப்ரொம்ட் விண்டோ திறந்து கொள்ளும். அங்கு list volume என டைப் செய்யும் போது உங்கள் கணினியிலுள்ள ட்ரைவ்களைப் பட்டியலிடும். அதாவது ட்ரைவ் பெயருடன் அதற்குரிய எழுத்துக்களையும் காண்பிக்கும். உங்களுக்கு e ட்ரைவை மறைக்க வேண்டுமெனின் select volume e  என டைப் செய்யுங்கள். இங்கு e ற்குப் பதிலாக நீங்கள் விரும்பும் ட்ரைவ் எழுத்தை வழங்கலாம். இப்போது நீங்கள் வழங்கிய ட்ரைவ் எழுத்துக்குரிய ட்ரைவ் தெரிவு செய்யப்படும். அடுத்து  remove letter h  என டைப் செய்து  எண்டர் விசையை அழுத்த அந்த ட்ரைவ் மறைக்கப் பட்டு விடும். இப்[போது கம்பியூட்டர் அல்லது This PC  விண்டோவைத் திறக்க e ட்ரைவ் மறைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.


மறு படி அந்த ட்ரைவைத் தோன்றச் செய்ய வெண்டுமானால் மேற் சொன்ன அதே வழியைப் பின்பற்றி remove என்பதற்குப் பதிலாக assign letter e என டைப் செய்ய வெண்டும். -அனூப்-