How to install multiple Operating Systems in a single PC?

ஒரே கணினியில் ஒன்றிற்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவிட..
கணினிப் பயனர் சிலர் வெவ்வேறு இயங்கு தளýங்களை (operating system) கணினியில் நிறுவிப் பணியாற்ற விரும்புவர். எடுத்துக் காட்டாக விண்டோஸ் 7 இயங்கு தளத்தில்  பணியாற்றுவோர் விண்டோýஸின் பழைய பதிப்புகளான விண்டோஸ் எக்ஸ்பி,  2000 மற்றும் விண்டோஸின் புதிய பதிப்பான 8 மற்றும் 10  போýன்ற இயங்கு தளங்களையும் சேர்த்து கணினியில் நிறுவிக் கொள்ள விரும்புவர். அதேபோன்று  விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பரிச்சயமானவர்கள் விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போýன்ý இயங்கு தளங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாயிருப்பர். இவ்வாறான தேவைகளுக்கு உதவுகிறது virtual machine தொழில் நுட்பம்.
வேர்ச்சுவல் மெசீýன் (virtual machine) ýýன்பது டுவெல் பூட் (duel boot) அல்லது (multi boot) மல்டி பூட் இயங்குதளங்களைக் கொண்ட கணினி போýன்றதல்ல. மல்டி பூட் எனப்படுவது ஒரு கணினியில் ஒரே நேரத்தில் ýன்ýறுக்கு மேற்பட்ட ýயங்கு தளங்களை நிறுவுதலைக் குறிக்கும். அப்படி ýன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவ முடிந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு இயங்கு தளத்திலேயெ நம்மால் பணியாற்ற முடியும். ஒவ்வொரு இயங்கு தளமும் ஒரே ýýன்பொருளிலேயே இயங்குகின்றன. இவை மெய்க்கணினி (real machine) எனப்படும்.
இதற்கு மாறாக வேர்சுவல் மெசீன் ýன்பது ஒரு மாயக் கணினி. இதன்ý மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவி ஒரே நேரத்தில் ýன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களில் நம்மால் பணியாற்ற முடிகிறது. அதாவது உங்கள் கணினி முதலில் பிரதான இயங்கு தளத்தை பூட் செய்யும். பிýன்னர் அதýன்ý மீது ஏனைய இயங்கு தளங்கள் பூட் செய்யப்படும். இவை சாதாரண ஒரு பயýýன்பாட்டு மென்பொருள் (Application Software) போல் இயங்கும்.
ஆங்கிலத்தில் வேர்ச்சுவல் எனும் வார்த்தை இல்லாத ஒன்றை இருப்பதாகக் (மாயை) கருவதைக் குறிக்கும். அதேபோல் ýங்கு வேர்ச்சுவல் மெசீன் என்பது நிஜமான கணினியல்ல. அது நிஜம் போல் இயங்கும் ஒரு கற்பனைக் கணினியே.

நீங்கள் விரும்பிய இயங்கு தளத்தை விண்டோஸுடýன்ý இணைத்து நிறுவுவதற்கென சில வேர்சுவல் மெசீன் மெýன்ýபொருள் கருவிகள் பயýன் பாட்டில் உள்ளன. வேர்ச்சுவல் ப்லேயர் (VMware Player), மைக்ரோஸொப்ட் வேர்ச்சுவல் பீசி மற்றும்  ஒரேக்கல் நிறுவனத்தின் வேர்ச்சுவல் பொக்ஸ் (VirtualBox) போன்றவற்றை  குறிப்பிட்டுக் கூறலாம். இவற்றுள் வேர்ச்சுவல் பொக்ஸ் என்பது மிகப் பிரபலமான ஒரு  மெýýன்பொருள் கருவி. இதன் மூலம்  இலகுவாக ஒன்ýறுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம். இதனை  https://www.virtualbox.org எனும் இணைய தளத்திலிருந்து  இலவசமாகவே டவுýன்லோட் செய்து கொள்ளலாம். பைல் அளவு 112 எம்பி.  -அனூப்-