தவறாக அனுப்பிய செய்தியை அழிக்கும்  Viber


கையடக்கக் கருவிகளின்  உடனடி செய்திச் சேவையை (Instant Messaging) பல நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு வழங்கி வருகின்றன. அவற்றுள்  வைபர் என்பது தற்போது பலராலும் பயன் படுத்தப்படு வரும் ஒரு செயலியாகும். (வைபர் பற்றிய  அறிமுகம் இங்கு அவசியமில்லை)

இந்த உடனடி செய்திச் சேவைகளைப் பயன் படுத்துகையில் ஒரு செய்தியை அல்லது படத்தை நண்பருக்கு அவசரமாக அனுப்பி விட்டு அதற்காக வருந்திய அனுபவங்களும் உங்களுக்கு  இருக்கலாம்.

நீங்கள் அனுப்பிய செய்தியை,  படத்தை அல்லது வீடியோவை  நண்பர் பார்த்து விட்டாரோ இல்லையோ அவரது கையடக்கக் கருவியிலிருந்து தொலைவிலிருந்து அழிக்கும் வசதியத் தருகிறது வைபர்.


வைபரில் இந்த வசதியைப் பயன் படுத்துவவதற்கு நீங்கள் அனுப்பிய செய்தியின் மீது நீண்ட அழுத்தத்தைப் பிரயோகிக்கும் போது தோன்றும் மெனுவில் Delete for everyone என்பதைத் தெரிவு செய்யுங்கள். அவ்வளவுதான். அந்தச் செய்தி நண்பரின் கருவி, உங்கள் கருவி மற்றும் வைபர் சர்வர் என அனைத்து இடங்களிலிருந்தும் அழிக்கப்பட்டு விடும்.

வைபர் தரும் இந்த வசதியை பிற உடனடி செய்திச் சேவை தரும் நிறுவனக்கள்  இன்னும் வழங்காமலிப்பது வியப்பாக இருக்கிறது.