Synchronization
Synchronization இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சாதனங்களில் உள்ள ஒரே தரவுகள் சமப்படுத்தப் படுவதைக் சிங்க்ரனைசேஸன் (Synchronization) எனப்படுகிறது. இதனைச் சுருக்கமாகச் சிங்க் - Sync எனப்படுகிறது. இரண்டு கணினிகளை Sync செய்வதன் மூலம்குறித்த ஒரு நேரத்தில் இரண்டு கணினிகளிலுமுள்ள ஒரே தரவுகளை ஒன்றை மற்றையதுடன் சமப்படுத்தப்படுகிறது அல்லது ஒரே தரவு மற்றைய கணினியில் பிரதி செய்யப் படுகிறது.

உதாரணமாக நேற்று உங்கள் கணினியில் உள்ள சில பைல்களை வேறொரு கணினியில் பிரதி செய்தீர்கள். இன்று உங்கள் கணினியில் உள்ள அதே பைல்களுள் சிலவற்றை அழித்து விடுவதோடு புதிதாகச் சில பைல்களையும் சேர்த்து விடுகிறீர்கள். இப்போது மறுபடியும் அதே பைல்களை மற்றைய கணினியுடன் Sync செய்யும்போது இன்று அழித்த அதே பைல்களை மற்றைய கணினியிலும் அழிக்கப்படுவதோடு புதிய பைல்களும் சேர்க்கப்பட்டுவிடும். விண்டோஸ் இயங்கு தளத்திலும் சிங்க் வசதியுள்ளது.
இப்போது சிங்க்; வசதி ஐபோன், அண்ட்ரொயிட் போன்ற கையடக்கக் கருவிகளிலும் கிடைக்கின்றன. இதன் மூலம் கையடக்கச்; சாதனங்களில் உள்ள பாடல்கள், படங்கள், வீடியோ, மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை உங்கள் கணினியில் உள்ள அதே பைல்களுடன் சமப்படுத்த முடிகிறது.
Post Comment