Printing tips

கடைசிப் பக்கத்திலிருந்து அச்சிட..

எம்.எஸ்.வர்டில் பல பக்கங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை அச்சிட்டு முடிந்த பின்னர் அச்சிட்ட தாள்கள் அனைத்தும் பக்கம் 1,2,3 என இல்லாமல் 20,19,18 என ஆவணத்தின் இறுதிப் பக்கத்தில் ஆரம்பித்து முதல் பக்கம் வரை அச்சுப் பொறியின் மேல் அடுக்கப்படுவதைக் காணலாம். அதாவது முதலில் அச்சிட்ட காகிதம் அடியிலும் இறுதியாக அச்சிட்டது மேலேயும் இருக்கும். இதனை மீண்டும் பக்கம் 1,2,3  என வரிசைப் படுத்த வேண்டியிருக்கும். அதற்கு இன்னும் நேரம் எடுக்கும். எனினும் அச்சிட்ட பின்னர் பக்கம் 1,2,3 என வரும்படி செய்யும் வசதி எம்.எஸ் வர்டில் உள்ளது. அதற்கு கடைசி பக்கத்தை முதலில் அச்சிட்டு பின்னோக்கி முதல் பக்கம் வரை அச்சிடலாம்.  அதற்கு File டேபில் க்ளிக் செய்து  Word Options தெரிவு செய்யுங்கள். அங்கு Advanced பட்டணில் க்ளிக் செய்து Print vDk; gFjpapd; fPo; Print pages in reverse order என்பதைத் தெரிவு செய்து OK சொல்லுங்கள்.