Greenify - Android App

அவசியமற்ற செயலிகள் (Apps) பின்புலத்தில் (background) இயங்கும் போது முறையற்ற நினைவக பயன்பாடு, இணைய (டேட்டா( பயன்பாடு மட்டுமன்றி முறையற்ற மின்சக்தி பயன்பாடும் நிகழ்கிறது. இவை ஸ்மாட்போனின் செயற்திறன் குறைவதற்கான காரணங்களாகக் குறிப்பிடலாம்.

பின்புலத்தில் தேவையற்ற விதத்தில் இயங்கும் செயலிகளை நீங்களாக நிறுத்த வேண்டியதில்லை. அதற்கு உதவுகிறது Greenify எனும் செயலி.
இது அவசியமற்ற செயலிகளை இயங்காமல் செய்வதோடு அவற்றை ஹைபனேட் நிலைக்கு மாற்றிவிடுகிறது. இதன் மூலம் ஸ்மாட்போன் மின் கலத்தின் ஆயுட்காலம் அதிகரிப்பதோடு செயற்திறனையும் அதிகரிக்கிறது.
மின் கலத்தின் சக்தியை பாதுகாப்பாதாகச் சொல்லும் பல செயலிகள் அதிகமாக விளம்பர நோக்கிலேயே வருகின்றன. அவற்றோடு ஒப்பிடும் போது க்ரீனிபை ஒரு மிகச் சிறந்த செயலி எனலாம். கூகில் ப்லே ஸ்டோரில் பல பயனர்கள் க்ரீனிஃபை செயலிக்கு ஆதரவாகக் கருத்துச் சொல்லிப் பரிந்துரைக்கின்றனர்.
Post Comment