வந்தாச்சு அண்ட்ராயிட் 10





கையடக்கத் தொலைபேசிகளுக்கான அண்ட்ராயிட் இயங்கு தளத்தின் புத்தம் புதிய பதிப்பான அண்ட்ராயிட் 10 கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக கூகுல்; வெளியிட்டது,

அண்ட்ராயிட் பதிப்புகள் ஒவ்வொன்றிற்கும் வழமையாக ஆங்கில அகர வரிசைப் படி உணவுப் பண்டங்களின் பெயரில் பெயரிட்டு வந்தது கூகுல். அண்ட்ராயிட் முன்னைய பதிப்பின் பெயராக P எனும்  ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் பை (Pie))  எனப்  பெயரிட்டிருந்ததால் அடுத்த பதிப்பின் பெயராக நிச்சயம் கியூ – Q எனும் ஆங்கில எழுத்திலேயே ஆரம்பிக்கும் என பலரும் எதிர் பார்த்திருந்தனர்.
ஆனால் கூகுல் இம்முறை எல்லோருடைய எதிர் பார்ப்பிற்கும் மாற்றமாக புதிய பதிப்பிற்கு அண்ட்ராயிட் 10 எனப் பெயரிட்டுள்ளது.
பல சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த அண்ட்ராயிட் 10 இயங்கு தளத்தை  கூகுல் பிக்ஸல் மற்றும் ரெட்மி தொலைபேசிகளுக்கு மாத்திரமே பயன் படுத்த அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் பிற நிறுவன தயாரிப்புகளிலும் எதிர் பார்க்க முடியும்.