கூகுல் க்ரோம் – சில உதவிக் குறிப்புகள்


   
தடயங்கள் இல்லாமல் இணையத்தில் பயணிக்க
நாம் பார்வையிடும் அனைத்து இணைய தளங்களைப் பற்றிய விவரங்கள் நம் கணினியில் சேமிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள்.  நாம் முன்னர் பார்வையிட்ட இணைய தளங்களின் பெயர்களை ஹிஸ்ட்ரி (history) பட்டியலில் பார்க்க முடியும். அது மட்டுமல்லாது  நாம் இணைய பயன் பாட்டின் போது வழங்கும் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் மற்றும் படிவங்கள நிரப்பும்; போது வழங்கும் விவரங்கள் போன்றனவும்  ’குக்கீ’ (cookies) எனும் கோப்பாக எமது கணினியிலேயே சேமிக்கப் பட்டு விடுகின்றன. தேடு பொறிகளைப் பயன் படுத்தி நாம் தேடும் தகவல்கள் கூட சேமிக்கப்படுகின்றன.  இவ்வாறு எமது இணைய செயற்பாடுகள் அனைத்தும் எமது சொந்தக் கணினியிலே பதிவாகி விட்டால் எமக்கொன்றும் பாதிப்புகள் இல்லை. எனினும் பிறர் கணினிகளிலோ அல்லது பொது இடங்களிலுள்ள கணினிகளிலோ மேற் சொன்ன தகவல்களனைத்தும் பதிவாகி விட்டால் எமது அந்தரங்க விடயங்களை பிறர் அறிந்து கொள்ள முடிவதுடன்  அதனால் பல  தீய விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். எனவே பொது இடங்களிலுள்ள கணினிகளில் இணையத்தைப் பயன் படுத்துவதற்கான விசேட வசதியை தற்போதுள்ள அனைத்து பிரவுசர்களும் வழங்குகின்றன. அந்த வசதியை பிரைவேட் பிரவுஸிங் (pசiஎயவந டிசழறளiபெ) எனப்படுகிறது. இந்த பிரைவேட் பிரவுசிங்கில் குக்கீ-கோப்புகள் எதுவும் சேமிக்கப்படமாட்டாது. இந்த பிரைவேட் பிரவுஸிங் வசதியைப் பயன் படுத்தி பொது இடங்களிலுள்ள கணினிகளில் நிம்மதியாக இணையத்தில் உலாவலாம
கூகில் க்ரோமில் பிரைவேட் பிரவுஸிங் செய்வதற்கு inஉழபnவைழ விண்டோவினுள் நுழைய வேண்டும், அதற்கு குரோம் பிரவுசர் விண்டோவின் வலது பக்க மூலையிலுள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனு பட்டனில் க்ளிக் செய்து வரும் மெனுவில் நேற inஉழபnவைழ றுiனெழற என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது ஒரு புதிய விண்டோ தோன்றும.; இந்த inஉழபnவைழ றுiனெழற வில் நாம் பார்த்த இணைய தளங்களை மட்டுமல்லாது  எந்த ஒரு தடயத்தையும் அடுத்தவர்களால் கண்டறிய முடியாது.   ;.
தற்செயலாக மூடப்பட்ட ’டேபை’-த்  திறப்பதற்கு
நீங்கள் இணைய தளங்களைப் பார்வையிடும் போது தவறாக ஒரு டேபை மூடி விடுகிறீர்கள். அதற்காக புதிய டேபைத் திறந்து மறுபடி இணைய தள முகவரியெல்லாம் டைப் செய்து  கொண்டிருக்க வேண்டியதில்லை. க்ரோம் உலாவி மூடிய அனைத்து டேபையும்  திரும்பப் பெறுவதை சாத்தியமாக்குகிறது.  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன வென்றால் திறந்திருக்கும் மற்றொரு டேபில் வலது கிளிக் செய்து,  ” “Reopen closed tab”” (மூடிய டேபை மீண்டும் திற) என்பதைத் தேர்ந்தெடுப்பதுதான். அல்லது  Control-Shift-T  விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். இது  அண்மையில்  மூடப்பட்ட எந்த டேபையும்  மீண்டும் திறக்கும்.  இவ்வாறு நீங்கள் மூடிய ஒவ்வொரு டேபையும் மூடிய ஒழுங்கில் திரும்பப் பெறலாம். நீங்கள் க்ரோம் விண்டோவை  முழுதாக மூடியிருந்தால்,  புதிதாக  க்ரோமைத் திறந்து  வலது கிளிக் செய்து “Reopen closed window”  என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மூடுவதற்கு முன்னர் பார்வையிட்ட அதே தளங்களை தொடர்ந்து பார்வையிட முடியும்.
டெஸ்க்டாப்பில் ஒரு இணைப்பைச் சேர்க்க
பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளமொன்றைப்  பின்னர் பயன்படுத்தக் கூடியவாறு  டெஸ்க்டாப்பில் ஒரு இணைப்பைச் சேர்க்கக் கூடிய வசதியை க்ரோம்  வழங்குகிறது.
க்ரோம் விண்டோவில் மேல்-வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளி மெனு பட்டனைக் கிளிக் செய்து, More tools ஊடாக Create shortcut என்பதை தெரிவு செய்ய ஒரு சிறிய  பொப்-அப் விண்டோ தோன்றும்.  அங்கு விரும்பிய பெயரை தட்டச்சு செய்து ஊசநயவந பட்டனில் கிளிக் செய்ய  குறித்த ஐகானுடன் அவ்விணையதள பக்கம்  டெஸ்க்டாப்பில் சேமிக்கப்பட்டுவிடும்.
மல்டி மீடியா கோப்புக்களை இழுத்துப் போட்டு இயக்கலாமே
அனைத்து வகை  மல்டிமீடியா கோப்புகளையும் அவசரமாகத் திறந்து பார்க்கும் தேவையேற்பட்டால் அவற்றை க்ரோம் உலாவியில்  இழுத்துப் போடுவன் (drag and drop) மூலம் இயக்கிப் பார்க்கலாம். அதாவது ஒரு படிமக் கோப்பு ஒன்றை இழுத்துப் போட படத்தைக் காண்பிக்கும், வீடியோவை இழுத்துப் போட வீடியோவை இயக்கும். ஒரு இசைக் கோப்பை ட்ரேக் அண்ட் ட்ரொப் செய்ய இசையைக் கேட்க அனுமதிக்கும். ஏன் pdf கோப்புகளையும் இழுத்துப் போட்டுத் திறக்கலாம் என்பது கூடுதல் வசதி.
இலகுவான ”தேடல்” வசதி 
இணைய தளமொன்றைப்  பார்த்துக் கொண்டிருக்கும் போது  காணக் கிடைக்கும் ஒரு சொல் அல்லது  சொற்றொடரின் பொருளை அல்லது அவை பற்றிய மேலதிக விவரங்களைப் பெற விரும்பினால்   கூகுல் க்ரோமில் எளிதான தேடல் வசதி உள்ளது. நீங்கள் தேட விரும்பும் சொல் அல்லது சொற்களை தெரிவு செய்து அதன் மேல் வலது கிளிக் செய்து, “Search Google for என்பதைத் தெரிவு செய்து க்ளிக் செய்யவும். அப்போது ஒரு புதிய டேப் திறந்து உங்கள் Google தேடல் முடிவுகளைக் காண்பிக்கும்.  மாற்றாக, நீங்கள் ஒரு சொல் அல்லது சொற்றொடரை தெரிவு செய்து அதனை முகவரி பட்டையில் இழுத்துப் போடுவதன் மூலமும் தேடலாம்.
’டேபை’ நிலையாக நிறுத்த


நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட டேப்ஸ் திறந்து  பணிபுரியும் போது சில ’டேப்’-களை திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை வரலாம்.  அவ்வாறான ’டேப்’-களை  க்ரோமில் நிலையாகப் பொருத்துவதன் (Pin) மூலம்  நீங்கள் அவற்றை தற்செயலாக மூடப்படாமல்  இருப்பதை உறுதி செய்து  கொள்ளலாம்.  அதற்கு நீங்கள் ஒரு டேபில்  வலது கிளிக் செய்து அங்கு Pin  என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நிலையாகப் பொருத்தி விடலாம். மேலும்  Pin   செய்யப் படும் டேப் ஆனது  இடத்தை சேமிக்கும் வகையில்  சிறிய ஐகானாக மாறுவதோடு திறக்கப்பட்டிருக்கும் டேப்களிடையே  முன்னால் தள்ளி வைக்கப்படும். க்ரோம் பிரவுஸரை  மூடிவிட்டு மீண்டும் திறந்தாலும்  Pin செய்யப்பட்ட டேப்கள் மூடப்படாமல் இருப்பதைக் காணலாம்.