Who Is a Local Guide in Google Maps? Google வரைபடத்தில் “உள்ளூர் வழிகாட்டி” என்பவர் யார்?

 கூகுல் மேப்ஸ் என்பது கூகுலின் மிகவும் பயனுள்ள ஒரு சேவை என்பதை எல்லோரும் அறிவீர்கள்.  ஆனால் அது ஒரே இரவில் இப்போதிருக்கும் நிலையை அடைந்து விட வில்லை. “உள்ளூர் வழிகாட்டிகள்” Local Guides எனும் கூகுல் ஆரம்பித்த திட்டமே வரைபடத்தின் துல்லியம் மற்றும் அதன் பயனுடைமையில்  பெரும் பங்கு வகிக்கிறது. நீங்களும் விரும்பினால் லோக்கல் கையிடு திட்டத்தின் ஒரு பங்களிப்பாளராக இருக்க முடியும்.

Who Is a Local Guide

 “உள்ளூர் வழிகாட்டி” என்பது Google Maps இல் பங்களிப்புச் செய்ய உங்களை அனுமதிக்கும் ஒரு தன்னார்வ அம்சம். உள்ளூர் வழிகாட்டியாக இல்லாமலும் நீங்கள் பங்களிப்புச் செய்ய  முடியும் என்றாலும், கூகுல் லோக்கல் கைடாக இருப்பதில்  சில கூடுதல் நன்மைகள் உள்ளன.

உள்ளூர் வழிகாட்டி திட்டம் பல  காலமாக பயன் பாட்டில்  உள்ளது. அடிப்படையில், இது கூகுல் வரைபடத்திற்கு பயனர்கள் பங்களிப்பதை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டமாகும்.  உள்ளூர் வழிகாட்டிகள் தங்கள் உள்ளீட்டிற்காக சின்னங்கள்  (badge) பேட்ஜ்கள், புள்ளிகள் மற்றும் பிற சலுகைகளைப் பெறுகிறார்கள். கூகுல்  மேப்ஸில் பயனர் வழங்கும் அதிக மதிப்புரைகளையும் புள்ளிகளையும்  காணும்போது  லோக்கல் கையிடுகள் பெருமகிழ்சியடைவார்கள்.

நீங்கள் வெகுமதிகள் (Rewards) மற்றும் புள்ளிகளைப் பெறக்கூடிய பல வழிகள் கூகுல் மேப்ஸில்  உள்ளன.  மேலும் நீங்கள் பெறும் புள்ளிகளின்  அளவிற்கேற்ப  நிலைகள் (levels) மற்றும் சின்னங்களுக்கு அவை மாற்றப்படும். .

நீங்கள் புள்ளிகளைப் பெறக்கூடிய பல்வேறு வழிகள் கீழே அட்டவனையில் காணலாம்.

Google வரைபட பங்களிப்புகளுக்கான புள்ளி

Who Is a Local Guide

Google Play புள்ளிகளைப் போலன்றி, லோகல் கையிடு புள்ளிகள் காலாவதியாகாது. இருப்பினும், நீங்கள் சமர்ப்பித்த உள்ளடக்கம் ஒரு கட்டத்தில் அகற்றப்பட்டால், அதற்காக நீங்கள் சம்பாதித்த புள்ளிகள் மறைந்துவிடும்.

உள்ளூர் வழிகாட்டி நிலைகளுக்கான புள்ளிகள் levels

இப்புள்ளிகளை நீங்கள் பெறும் போது,  நிலைகளை  levels நோக்கி முன்னேறி பேட்ஜ்களை பெற ஆரம்பிப்பீர்கள். முதல் மூன்று நிலைகளில் பேட்ஜ் வழங்கப்படமாட்டாது.  ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு நிலைக்கும் புதிய சின்னத்தைப்   பெறுவீர்கள்.

Who Is a Local Guide உள்ளூர் வழிகாட்டியாக எப்படி மாறுவது?

18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் உள்ளூர் வழிகாட்டியாக விண்ணப்பிக்கலாம். மேலும்  லோக்கல் கையிடை ஆதரிக்கும்   40 நாடுகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்கவும் வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியது, பதிவு செய்யும்  பக்கத்தைப் (sign up) பார்வையிட்டு உங்கள் இருப்பிடத்தை (location) சரியாக் குறிப்பிடுங்கள். மேலும் கூகுல் மேப்ஸ்ஸுடன் தொடர்புடைய  Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்களா என்பதை எப்போதும்  உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கூகுல் உங்களை லோக்கல் கைடாக  ஏற்றுக்கொள்ளும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. உள் நுழைந்ததும் (sign in) , நீங்கள் Google மேப்ஸ்ஸிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அப்போதே உங்கள்  பங்களிப்பை  ஆரம்பிக்கலாம்.