விண்டோஸ் நிறுவும்போது MBR partition ஒன்றை GPT partition ஆக மாற்றுவது எப்படி?

 




Windows 10 அல்லது 11 Bootable Media ஐ Install செய்யும்போது உங்களுக்கு “Windows cannot be installed to this disk MBR” என்று இந்த Error – பிழைச் செய்தியப் பார்த்திருக்கக் கூடும்

உங்கள் ஹாட் டிஸ்க்கில் Master Boot Record (MBR) பார்ட்டிஷன் அட்டவனையே உள்ளது என்பதும் EFI Systems இல் Guided Partition Table (GPT) உள்ள Disk களுக்கு மட்டுமே WIndows Install செய்ய முடியும் என்பதைதான் இது சொல்கிறது.

the selected disk has an mbr partition table

இதை சரிசெய்வதற்கு பல பேர் ஹாட் டிஸ்கை வேறு ஒரு கம்பியூட்டரில் பொருத்தி OS இல் Disk Management Disk இல் பகிர்வு அட்டவணையை மாற்றுவதையே தீர்வாக வைஹ்திருப்பார்கள். ஆனால் நாம் இங்கு Windows Installation இல் இருக்கும் போதே அதனை எவ்வாறு சரி செய்வது எனப் பார்ப்போம்.

படி 1
முதலில் Where do you want to install windows? (நீங்கள் விண்டோஸை எங்கு நிறுவ விரும்புகிறீர்கள்) எனும் திரையிலிருந்து பின்னோக்கிச் சென்று – Back ஆகி Shift + F10 அழுத்தி CMD யை திறக்கவும்.

படி 2
இப்போது diskpart என்று தட்டச்சு செய்து Enter  தட்டுங்கள்

படி 3
list disk என்று டைப் செய்து Enter  தட்டுங்கள்

படி 4
இப்போது select disk என்று தட்டச்சு செய்து இடை வெளி விட்டு மேல் வந்த பட்டியலில் list  உங்கள் டிஸ்கை தேர்ந்தெடுக்கவும். உங்களிடம் உள்ளது ஒரு Disk ஒன்று என்றால் இதை எடுக்கிறது 1.

உதாரணம் : disk 1 ஐத் தேர்ந்தெடுக்கவும்

0 என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். உங்கள் Windows Installation media வையெ 0 எனக் காட்டுகிறது.

image 46

படி 5
அடுத்து clean என்று Type செய்து Enter செய்யவும்.

இப்போது உங்கள் Disk இல் உள்ள Data அனைத்தும் Delete ஆகிவிடும். . உங்களுக்கு முக்கியமான டேட்டா இருக்குமானால் முன்னரே அவற்றை முன்பே Backup செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

படி 6
Clean செய்து முடிந்த பிறகு convert GPT என்று Type செய்து Enter செய்யவும்.

ஹாட் டிஸ்கை தயார்படுத்தியாகிவிட்டது.
இப்போது நீங்கள் Windows Installation ஐ முன்னெடுத்து செல்ல முடியும்.