WhatsApp Update – Emoji Reactions

 


வாட்சப் கடந்த வாரம் தனது புதிய அப்டேட் மூலம் பயனர்களுக்கு எ/இ-மோஜி எதிர்வினைகளை (emoji reactions) அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வாட்சப்  வெப் ஆகிய மூன்று  தளங்களுக்கும் ஒரே நேரத்தில்  இந்தப்  புதிய அப்டேட் கிடைக்க விருப்பதோடு  இப்போதே அதிகமான பயனர்களுக்கு இமோஜி எதிர்வினைகள் தோன்றவும்  ஆரம்பித்துள்ளது.

whatsapp emoji

இமோஜி எதிர்வினைகள் அம்சம் ஏற்கனவே Facebook Messenger மற்றும் Instagram இல் கிடைக்கிறது. இது பயனர்கள் ஒவ்வொரு செய்திக்கும் தனித்தனியாக இமோஜியுடன் செயல்பட அனுமதிக்கிறது. இந்த இமோஜி எதிர்வினைகள் வாட்சப் குழுமம் (group) மற்றும் தனிப்பட்ட அரட்டைகளில் (chats) தெரியும்.

பயனர்கள் ஒரு செய்திக்கு எதிர்வினையாற்றுவதற்கு ஆறு இமோஜிகளைப் பெறுவார்கள். ஒரு செய்தியை நீண்ட நேரம் அழுத்தும் போது இமோஜிகள் காண்பிக்கப்படும். பயனர்கள் விரும்பிய இமோஜியைத் தட்டலாம்.

இப்போது கிடைக்கும் ஆறு இமோஜிகளில் தம்ஸ் அப் (thumbs up), ஹார்ட் (heart), சிரிக்கும் இமோஜி (haaha), அதிர்ச்சியடைந்த (shocked) இமோஜி, சோகத்துடன் கண்ணீர் துளி (teardrop) மற்றும் பிரார்த்தனை (prayer) இமோஜி ஆகியவை அடங்கும். எனினுm பயனர்கள் இந்த ஆறு இமோஜிகளை மாற்ற முடியாது.