Will ChatGPT replace Google?



ChatGPT – Generative Pretrained Transformer ஜெனரேட்டிவ் ப்ரீட்ரெய்ன்டு டிரான்ஸ்ஃபோர்மர் என்பது OpenAI அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன இயற்கை மொழி செயலாக்க (NLP-Natural Language processing model) மாதிரி.

ChatGPT உங்கள் உரை உள்ளீட்டிற்கேற்ப (text input) மனிதனைப் போன்ற பதில்களை உருவாக்கித் தருகிறது

இது புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் இணையதளங்கள் போன்ற பல்வேறு ஆதார மூலங்களிருந்து பெறப்பட்ட பெரும் அளவிலான உரைத் தரவுகளினால் (text data) பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

ChatGPT உடன் கட்டமைக்கப்பட்ட chatbot எனும் கருவி கேள்விகளுக்கான பதில்களை வழங்குதல், உரையாடலில் ஈடுபடுதல், கவிதைகள்,கதைகள், மற்றும் கட்டுரைகளை எழுதுதல், மொழி பெயர்த்தல், கணினி மொழிகளில் நீங்கள் விரும்பிய படி கோடிங்ஸ்- codings எனும் குறிமுறைகளை எழுதுதல் போன்ற பல் வேறு பயன்பாடுகளில் சிறப்பாகச் செயற்படுகிறது.

பிற இயந்திர கற்றல் மாதிரிகளைப் (machine learning) போன்றே Chat GPT பயிற்சியளிக்கப்பட்ட தரவுகளின் மூலம் செயற்படுகிறது.

எனினும் பயிற்சித் தரவில் தவறுகள் இருப்பின், அதன் வெளியீடுகளிலும் அது பிரதி பலிக்கும். இது ChatGPTயின் ஒரு பாதகமான விளைவு

இருந்தாலும் ChatGPT என்பது ஒரு சக்திவாய்ந்த கருவி, மனிதனைப் போன்ற பதில்களை உருவாக்கும் திறனானது செயற்கை நுண்ணறிவு AI (Artificial Intelligence) மற்றும் இயற்கை மொழி செயலாக்கத் துறையில் ஒரு அற்புதமான முன்னேற்றம்.

ChatGPT கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் ஓபன்ஏஐ நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது.

ஓபன்ஏஐ என்பது சாம் ஆல்ட்மேனுடன் Sam Altman , இணைந்து- Elon Musk இலோன் மஸ்க் இருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய ஓர் ஆராய்ச்சி அமைப்பு

ChatGPT கூகுல் தேடற் பொறியை விஞ்சுமா என்றெல்லாம் இப்போதைக்குச் சொல்ல முடியாது. ஏனேனில் கூகுல் தேடற் பொறி என்பது வேறொரு விதமாகத் செயற்படுவதுடன் ChatGPT தரவுகளுக்காக கூகுலிலும் சார்ந்திருக்கிறது. இருந்தாலும் கூகுல் தேடற் பொறியிலும் இதே போன்ற வசதிகளை மிக விரைவில் வரலாம்.

ChatGPT ஐப் பயன்படுத்த முதலில் நீங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். உங்கள் மொபைல் இலக்கத்தையும் openai தளம் சரி பார்த்த பின்னரே ChatGPT ஐப் பயன் படுத்த அனுமதிக்கும்.

Chat GPT வெப் அப்லிகேசனை இப்போது இலவசமாகப் பயன்படுத்தலாம் . ஆனால் எதிர் காலத்தில் இது கட்டண சேவையாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.

ChatGPT