டெக்ஸ்டை விரும்பிய கோணத்தில் திருப்புவதற்கு
எம்.எஸ்.வர்டில் வர்ட் ஆட், டெக்ஸ் பொக்ஸ் போன்றவற்றை விரும்பிய கோணத்தில் இலகுவாக திருப்பலாம் என்பது நீங்கள் அறிந்ததே. எனினும் சாதாரணமாக டைப் செய்த ஒரு டெக்ஸ்டை திருப்ப உங்களால் முடியுமா? அதற்கும் வழி சொல்கிறது எம்.எஸ்.வர்ட்.

முதலில் சுழற்ற வேண்டிய டெக்ஸ்ட் பகுதியத் தெரிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் Edit மெனுவில் Cut தெரிவு செய்யுங்கள். பின்னர் அதே எடிட் மெனுவில் Paste Special தெரிவு செய்ய ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அதிலிருந்து Picture தெரிவு செய்யுங்கள். அப்போது In line with text எனும் போமட்டிங் தெரிவோடு அந்த டெக்ஸ்டை சுற்றி Resizing handles தோன்றியிருக்கக் காணலாம்.

பின்னர் அதன் மேல் ரைட் க்லிக் செய்து Format Picture தெரிவு செய்யுங்கள். அபோது தோன்றும் டயலொக் பொக்ஸிலிருந்து Layout டேபில் க்ளிக் செய்து Square எனும் லேயவுட் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். இபோது அந்த டெக்ஸ்டைச் சுழற்றக் கூடியதாக பச்சை நிற பட்டன் தோண்றக் காணலாம். அதன் மூலம் அந்த டெக்ஸ்டை விரும்பிய கோணத்தில் சுழற்ற முடியும்.
-அனூப்-