How to restrict others from using your drives


ட்ரைவ்களை பிறர் அணுகாமல் தடுப்பது எப்படி?

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் கணினியிலுள்ள ஹாட் டிஸ்க் டரைவ், சீடி ரொம் டரைவ் போன்றவற்றை பிறர் அணுகாத வண்ணம் தடுப்பதற்கான வசதி விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் உள்ளது. இவ்வாறு தடுப்பதன் மூலம் ஏனையோர் கணினியில் (ஹாட் டிஸ்க் ட்ரைவில்) சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான பைல்களைத் அனுமதியின்றி திறந்து பார்க்காமலோ அல்லது அவற்றை அழித்து விடாமலோ பாதுகாக்க முடியும்.

ட்ரைவ்களை பிறர் அணுகுவதைத் தடுப்பதற்குப் பின்வரும் வழி முறையை கையாளுங்கள். முதலில் ஸ்டார்ட் மெனுவில் ரன் தெரிவு செய்து வரும் ரன் பொக்ஸில் gpedit.msc என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். அப்போது தோன்றும் Group Policy விண்டோவின் இடது புறம் User Configuration \ Administrative Templates \ Windows Components ஊடாக Windows Explorer தெரிவு செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலது புறம் Setting என்பதன் கீழ் Prevent access to drives from My Computer தெரிவு செய்து அதன் மேல் இரட்டை க்ளிக் செய்யுங்கள்.

அப்போது தோன்றும் விண்டோவில் Setting டேபின் கீழ் Enable தெரிவு செய்யுங்கள். பின்னர் அதன் கீழுள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்து வரும் ட்ரொப் டவுன் லிஸ்டிலிருந்து விரும்பிய ஒரு ட்ரைவையோ அல்லது எல்லா ட்ரைவ்களையுமோ தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். கணினியை மறுபடி இயக்காமலேயே உடனடியாகவே நீங்கள் செய்த மாற்றங்களை விண்டோஸ் எற்றுக் கொள்ளும். ஆனால் Restricting all drives தெரிவு செய்வதன் மூலம் அடுத்தவர்களால் கனினியிலுள்ள CD / DVD மற்றும் பென் ட்ரைவ்களையும் அணுக முடியாது போய் விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவ்வாறு ட்ரைவ்களை அணுக முடியாது செய்த பின்னர் வேறொரு நபர் கணினியில் மை கம்பியூட்டர் திறக்கும்போது அங்கு கணினியிலுள்ள ட்ரைவ்கள் அனைத்தையும் காண்பிக்கும். எனினும் அவற்றைத் திறக்க முற்படும் போது ஒரு பிழைச் செய்தியைக் காண்பித்து திறக்க அணுமதிக்க மறுக்கும்.
மேற் சொன்ன Local Group Policy விண்டோ மூலம் உங்கள் கணினியை நிர்வகிப்பதற்கான ஏராளமான தெரிவுகள் உள்ளன. இதன் மூலம் பல பேர் பயன் படுத்தும் ஒரு கணினியை இலகுவாகப் பாதுகாக்க முடியும்.
-அனூப்-