How to install fonts in Windows

புதிய எழுத்துருக்களை நிறுவுவதெப்படி?


விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தித்கு முன் வெளி வந்த விண்டோஸ் பதிப்புகளில் புதிதாக எழுத்துருக்களை நிறுவுவது என்பது கணினிக்குப் புதியவர்களுக்கு சற்று சிரமமான விடயமாக விருந்தது.

புதிய எழுத்துருக்களை நிறுவுவதற்கு கண்ட்ரோல் பேணலில் Font போலடரைத் திறந்து வரும் விண்டோவில் File மெனுவில் Install New Font தெரிவு செய்து அங்கிருந்து பொண்ட் பைல் சேமிக்கப் பட்டிருக்கும் ட்ரைவைக் காண்பித்து நிறுவ வேண்டியிருந்தது.

How to install font
விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பிலும் இதே முறையே பின் பற்றப்பட்டாலும் இன்னும் சிறிது இலகுவாக புதிய எழுத்துருக்களை Copy & Paste முறையில் கண்ட்ரோல் பேணலில் உள்ள பொண்ட் போல்டரிற்குப் பிரதி செய்து விடுவதன் மூலமும் நிறுவ முடிகிறது.

எனினும் விண்டோஸின் அண்மைக் காலப் பதிப்புகளான விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் செவன் பதிப்புகளில் புதிய எழுத்துருக்களை நிறுவும் முறை மேலும் இலகுவாக்கப்பட்டுள்ளது. புதிய எழுத்துருக்களை நிறுவுவதற்கு உரிய எழுத்துரு பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Install தெரிவு செய்ய அடுத்த ஒரு சில வினாடிகளில் அந்த எழுத்துரு நிறுவப்பட்டு விடுகிறது.

-அனூப்-