Google Play Store - AppLock

AppLock

டேப்லட் கணினி, செல்போன் போன்ற கையடக்கக் கருவிகள் தனி நபர் பாவனைக்குரியதே. எனினும் சில வேளைகளில் இக்கருவிகளை நண்பர்களின் கையிலும் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். இவ்வாறு கொடுக்கும் போது நண்பர்கள் புதிதாக அப்லிகேசன்கள் நிறுவி விடுவார்கள அல்லது வேறு ஏதாவது செட்டிங் மாற்றி விடுவார்கள். மின்னஞ்சல் போன்ற அந்தரங்க விடயங்களைக் கூட இவர்கள் பார்வையிட விட வாய்ப்புள்ளது.

இவ்வாறான தொல்லையிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கென அண்ட்ரொயிட் கருவிகளுக் காக உருவாக்கப் படிருக்கும் அப்லிகேசனே  AppLock. இதன் மூலம் நீங்கள் விரும்பும் அப்லிகேசனை பாஸ்வர்ட் கொண்டு பாதுகாக்க முடியும் அண்ட்ரொயிட் கருவியை எவர் கையில் கிடைத்தாலும் அந்தப் பாஸ்வர்ட் அறிந்தால் மட்டுமே அப்லிகேசன்களை இயக்கலாம்.

தொலைபேசியில் அழைப்புக்களை எடுத்தல், மின்னஞ்சல் பார்வையிடுதல், அப்லிகேசன்களை நிறுவுதல், செட்டிங் மாற்றுதல் போன்ற செயற்பாடுகளைத் எப்லொக் மூலம் இலகுவாகத் தடுக்க முடியும். கூகில் ப்லே ஸ்டோரில் இது இலவசமாகவே கிடைக்கிறது.

அனூப்