How to configure Gmail for other email sevices?

Gmail – இல்  பிற மின்னஞ்சல்களையும் பார்வையிடலாம்

பொதுவாக மின்னஞ்சல் பாவனையாளர்கள் பலரும் ஜிமெயில்யாகூஹொட் மெயில் என ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் சேவை நிறுவனங்களில் கணக்குகளை வைத்திருப்பது வழக்கம்.  இம்மின்னஞ்சல்களை பிரவுஸரில் பார்வையிடுவதாயின் ஒவ்வொரு மின்னஞ்சல் சேவை தரும் நிறுவன இணைய தளத்திற்குச் சென்று லொக் இன் செய்து பார்வையிட வேண்டும். இது சற்று சிரமான வேலைதான்.   

எனினும் Outlook, Outlook Express போன்ற மெயில் க்ளையண்டுகளைப் பயன் படுத்துவதன் மூலம் பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே நேரத்தில் நிர்வகிப்பதற்கான வசதியைப் பெறலாம். எப்போதும் ஒரே கணினியைப் பயன் படுத்துபவர்களுக்கு இந்த மெயில் க்ளையண்ட் (mail client)  சிறந்த தெரிவுதான். எனினும் மின்னஞ்சல்களைப் பார்வையிட நிரந்தரமாக ஒரு கணினியைப் பயன் படுத்தாதவர்கள் தாம் பயன் படுத்தும் ஒவ்வொரு கணினியிலும் இந்த மெயில் க்ளையண்டுக்கான செட்டிங்க்ஸ் மாற்ற வேண்டியிருக்கும்.

இமெயில் க்ளையண்டுகள் போன்று பல மின்னஞ்சல் கணக்குகளை பார்வையிடவும் நிர்வகிக்கவும் கூடிய வசதியை ஜிமெயில் தருகிறது. அதாவது ஒரு மெயில் க்லையண்ட்டாகவும் ஆகவும் ஜிமெயில் தொழிற்படுகிறதுஇதன் மூலம் உங்கள் பிரவுசரிலேயே ஜிமெயில் மட்டுமல்லாது பிற நிறுவனங்களின் கணக்குகளுக்கு வரும் மின்னஞ்சல்களையும் ஜிமெயில் இன்பொக்ஸிலேயே பார்வை யிடலாம்இவ்வாறு ஐந்து வெவ்வேறு கணக்குகளை ஜிமெயிலுடன் இணைத்துக் கொள்ள முடியும்.   அந்த வசதியைப் பெற  பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.


முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கிற்குள் லொகின் செய்து நுளையுங்கள். அங்கு Settings க்ளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் Accounts & Import டேபில் க்ளிக் செய்து  Add a POP3 mail account you own   என்பதைக் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு பொப் அப் விண்டோ தோன்றும். அங்கு பிற மின்னஞ்சல் கணக்கு விவரங்களை வழங்கி கீழுள்ள Add Account பட்டனில் க்ளிக் செய்து விடுங்கள்.

அனூப்