What is Sync?

Sync என்றால் என்ன? 


Sync என்பது சிங்க்ரனைசேஸன் synchronization  என்பதன் சுருக்கமாகும். இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சாதனங்களிலுள்ள ஒரே தரவுகள் சமப்படுத்தப் படுவதையே சிங்க்ரனைஸ் எனப்படுகிறது. இரண்டு கணினிகளை Sync செய்தல் என்பது குறித்த ஒரு  நேரத்தில் இரண்டு கணினிகளிலுமுள்ள ஒரே தரவுகளை ஒன்றை மற்றையதுடன் சமப் படுத்தப் படுவதைக் குறிக்கிறது அல்லது ஒரே தரவு மற்றைய கணினியில் பிரதி செய்யப் படுகிறது.
 உதாரணமாக நேற்று உங்கள் கணினியிலுள்ள சில பைல்களை வேறொரு கணினியில் பிரதி செய்தீர்கள். இன்று உங்கள் கணினியிலுள்ள அதே பைல்களுள் சிலவற்றை அழித்து விடுவதோடு புதிதாக சில பைல்களையும் சேர்த்து விடுகிறீர்கள். இப்போது மறுபடியும் அதே பைல்களை மற்றைய கணினியுடன் Sync செய்யும் போது இன்று அழித்த அதே பைல்களை மற்றைய கணினியிலும் அழிக்கப்படுவதோடு புதிய பைல்களும் சேர்க்கப் பட்டுவிடும்.


இப்போது சிங்க் எனும் வசதி ஐபோன், ஐபோட்  மற்றும் அண்ட்ரொயிட் போன்ற கையடக்கக் கருவிகளிலும் கிடைக்கின்றன. கையடக்கக் சாதனங்களிலுள்ள கணினியிலுள்ள பாடல்கள், வீடியோ, மற்றும் மின்னஞ்சல் போன்றன உங்கள் கணினியிலுள்ள அதே பைல்களுடன் சமப்படுத்தப்படுகின்றன. 

அனூப்