How to hide files in Windows
பைல் போல்டர்களை இப்படியும் மறைக்கலாமே..
விண்டோஸ் இயங்கு தளத்தில் ஒரு போல்டரை அல்லது பைலை மறைத்து வைப்பது எப்படி என பலரும் அறிந்திருப்பீர்கள். அதாவது மறைத்து வைக்க விரும்பும் பைல் அல்லது போல்டரின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் ப்ரொப்படிஸ் தெரிவு செய்யும் போது வரும் டயலொக் பொக்ஸில் “hidden” எனும் பண்பை தெரிவு செய்து விட்டால் போதும். அந்த பைல் மறைந்து விடும் அவ்வாறே மறைத்து வைத்த அந்த பைலை மறுபடியும் தோன்றச் செய்யும் இரகசியத்தையும் கூட அறிந்திருப்பீர்கள்.
ஆனால நான் இங்கு சொல்ல வருவது அது போன்ற மறைத்து வைத்தல் அல்ல. முக்கியமான விண்டோஸ் இயங்கு தளத்துக்குரிய பைல்கள் மறைத்து வைக்கப்படுவது போல் ஒரு பைலை மறைத்து விட்டால் விண்டோஸ் எக்ஸ்ப்லோரரில் Folder
Options தெரிவு செய்து display
hidden files and folders என்பதைத் தெரிவு செய்தாலும் அந்த பைலைக் காண்பிக்காது.
இவ்வாறு பைலை மறைத்து வைப்பதற்கு பின்வரும் வழி முறையைக் கையாளலாம். முதலில்
ஸ்டாட் - ரன் ஊடாக cmd என டைப் செய்து கமாண்ட் ப்ரொம்டில் நுளையுங்கள். இங்கு பைலை மறைப்பதற்கு attrib எனும் கட்டளையை கீழுள்ளவாறு (மேற்கோள் குறியீடின்றி) வழங்குங்கள். . attrib +s +h “C:\Users\Mad\Desktop\images”
இங்கு “C:\Users\Mad\Desktop\images” எனும் பகுதிக்குப் பதிலாக நீங்கள் மறைத்து வைக்க விரும்பும் போல்டர் அமைந்துள்ள இடைத்தின் path ஐ வழங்க வேண்டும். Images என்பது போல்டரைக் குறிக்கிறது. மறைக்க வேண்டியது ஒரு பைலாயின் அந்த பைலுக்குரிய பைல் நீட்சியையும்-file extension வழங்க வேண்டும்.
இப்போது அந்த Images போல்டர் மறைக்கப் பட்டு விடும். எக்ஸ்ப்லோரர் விண்டோவில் போல்டர் ஒப்ஸன்ஸ் தெரிவு செய்து show hidden
files and folders என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றினாலும் மறைத்து வைத்த போல்டரைக் காண்பிக்காது.
மறைத்து வைக்கப் பட்ட அதே பைலை மறுபடி தோன்றச் செய்ய மேற் சொன்ன அதே கட்டளையை உரிய பைல் அல்லது போல்டர் சேமிக்கப் பட்டுள்ள இடத்துடன்
”+”
குறியீட்டுக்குப் பதிலாக “-“ குறியீட்டை
வழங்க வேண்டும். attrib -s
-h “C:\Users\Mad\Desktop\images”
இவ்வாறு மறைத்து வைக்கப்படும் பைல்களையும் விண்டோஸ் எக்ஸ்ப்லோரரில் காண்பிப்பதற்கு மற்றுமொரு வழியும் உண்டு. அதற்கு போல்டர் ஒப்ஸன்ஸ் டயலொக் பொக்ஸில் Hide protected operating system files என்பதை தெரிவு நிலையிலிருந்தி நீக்கி விட வேண்டும்.
அனூப்