Why some files cannot be deleted?

ஃபைலை அழிக்க முடியவில்லையா?

சில வேளைகளில் கணணினியில் ஒரு ஃபைலை அல்லது ஃபோல்டரை அழிக்க முயலும் போது, Cannot delete file because it's being used by another person or program. Close any programs that might be using the file and try again எனும் பிழைச் செய்தியை அதாவது அந்த ஃபைலை வேறொரு செய்நிரலின் பயன் பாட்டில் இருப்பதாகக் காண்பித்து விண்டோஸ் இயங்கு தளம் அந்த பைலை அழிக்க மறுக்கும்.

இந்தப் பிழைச் செய்தி (Error Message) ஒரு  ஃபைலை அழிக்க முயலும்போது மட்டுமல்லாமல் அதனைப் பிரதிசெய்யாவோ  அல்லது இடமாற்றம் செய்ய முயலும் போது கூட வரலாம்.

இந்தப் பிழைச் செய்தி வருவதற்கு விண்டோஸ் இயங்கு தளம் அல்லது இயக்க நிலையிலுள்ள வேறொரு ப்ரொக்ரம் அதனைப் பயன்படுத்துவதனால் அந்த ஃபைலை அழிக்க முடியாதவாறு அது பூட்டிடப் படுவதே காரணமாகும்.

அந்த பைலை உங்களுக்கு அழிக்கவே வேண்டுமானால் பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்.
  • பிழைச் செய்தி தோன்றிய பின்னர் ஓரிரு நிமிடங்கள் தாமதித்து மறுபடியும் முயலுங்கள்.
  • பைலைக் காண்பிக்கும் விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் விண்டோவை மூடி விட்டு மறுபடி அதனைத்  திறந்து அழிக்க முயலுங்கள்.
  • அந்த  பைலை தற்போது பயன் படுத்திக் கொண்டிருக்கும் எப்லிகேசன் எது என்பதைக் கண்டறிந்து அதன் இயக்கத்தை நிறுத்துங்கள். அதனைப் யன் படுத்தும் ப்லிகேசன் எது என்பதைக் கண்டறிய முடியாத போது பயன் பாட்டிலுள் அனைத்து அப்லிகேன்களையும் நிறுத்தி விட்டு முயற்சி செய்யுங்கள்.
  • கணினியின் இயக்கத்தை முழுமையாக நிறுத்தி மறுபடி ஆரம்பித்து (restart) ஃபைலை அழிக்க முயலுங்கள்.
  • ப்லிகேசன்கள் எதுவும் திறக்கா நிலையிலும் அந்த பைலை அழிக்க முடியா விட்டால் பின்னணியில் இயங்கும் ஏதோவொரு ப்ரோக்ரம்  அதனைப் பயன் படுத்திக் கொண்டிருப்பதே காணம் ஆகும். எனவே பின்னணியில் இயங்கும் ப்லிசேசன்களை நிறுத்துவதற்கு கணினியை (Safe Mode) இல் இயக்கி பைலை அழியுங்கள்.

மேற் சொன்ன எந்த வழி முறைகளும் பயன் படாத போது பைல்களை அழிப்பதற்கென உருவாக்கப் பட்டிருக்கும் மூன்றாம் தரப்பு பயனர் சேவை மென்பொருள்களைப்  பயன் படுத்தலாம்அவ்வாறான ஒரு மென்பொருள் கருவியே  unlocker  இதனை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன் படுத்திப் பாருங்கள்

அனூப்