How to search a file quickly?


பைல்களை விரைவாகத் தேடிப் பெற.

கணினியில் தொலைத்து விட்ட உங்கள் பைல்களைத் தேடிப் பெற Search for files or folders எனும் வசதி விண்டோஸில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் ஒரு பைலை இலகுவாகத் தேடிப் பெறலாம். இங்கு உங்கள் பைல்களைத் தேடுவதற்கு அந்த பைல் வகைக்குரிய எக்ஸ்டென்சனை வழங்குவதன் மூலம் மேலும் விரைவாகத் தேடிப் பெறலாம். 


உதாரணமாக test எனும் பெயர் கொண்ட ஒரு வர்ட் பைலைத் தேட Search விண்டோவில் All or part of the file name எனுமிடத்தில் test.doc என வழங்க வேண்டும். எல்லா வேர்ட் பைல்களையும் தேடிப் பெற *.doc என வழங்கவும். அவ்வாறே எக்ஸல் பைலாயின் *.xls எனவும் பீடிஎப் பைலாயின் *.pdf எனவும் ஒரு exe பைலாயின் *.exe எனவும் வழங்க வேண்டும். T யில் ஆரம்பிக்கும் ஒரு வர்ட் பைலைத் தேட t*.doc என டைப் செய்யுங்கள். அதேபோல் *e.doc என வழங்க e யில் முடிவுறும் அனைத்து வர்ட் பைல்களையும் முடிவாகப் பெறலாம்..இங்கு (*) குறியீட்டின் பிரயோகத்தை வைல்ட் காட் (wild card) எனப்படுகிறது. மேலும் ஒரு பைலை கணினி முழுவதும் தேடாமல் உரிய ட்ரைவில் மட்டுமே தேடச் செய்வதன் மூலம் நேரத்தை மேலும் மீதப்படுத்தலாம்