What are Portable Apps?

Portable Apps   என்றால் என்ன?

அடிப்படையில் போட்டபல் எப்லிகேசன் என்பது ஒரு பயன்பாட்டு மென்பொருளே (application software) . இதனை இயங்கு தளத்தில் (operating system) அதிகம் சாரா வண்ணம் ரிமூவபல் மீடியா (removable media) எனும் அவ்வப்போது கணினியில் பொருத்தி பயன் படுத்துவதும்  கையிலெடுத்துச் செல்லத்தக்கதுமான பென் ட்ரைவ், சிடி, டீவிடி போன்றவற்றிலிருந்து இயங்கக் கூடியதாக உருவாக்கப்பட்டிருப்பதையே போட்டபல் எப்ஸ் (Portable Appsஎனப்படுகிறது.
  • ஒரு போட்டபல் எப்லிகேசன் flash drive, portable hard drive, iPod> CD, DVD போன்ற எந்த ஊடகத்திலிருந்தும் இயங்கக் கூடியதாயிருக்கும்.
  • கணினியில் ஹாட் ட்ரைவ் பாட்டிசன்களுக்குரிய எழுத்தை (Drive Letterமாற்றினாலும் கூட போட்டபல் எப்ஸ் இயங்கும்.. (ஆனால் வழமையான மென்பொருள்கள் இவ்வாறு இயங்குவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.)
  • அவை உங்கள் கணினியில் பைல் போல்டர்களை உருவாக்குவதில்லை
  • ஒரு போட்டபில் அப் இயங்குவது விண்டோஸ் இயங்கு தளம் எனின் விண்டோஸினால் தானாக உருவாக்கப்படுபவை தவிர ரெஜிஸ்ட்ரியில் எந்த வித மாற்றத்தையும் செய்து விடாது.
  • போட்டபல் எப்ஸ் இயங்குவதற்கு மேலதிகமாக எந்தவொரு மென்பொருளும் அவசியமில்ல.
  • கணினியில் நிறுவியுள்ள வேறு மென்பொருளகளுடன் இவை முரண்படுவதில்லை.
இவ்வாறு ஒரு போட்டபில் அப்லிகேசன் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கும்.

இன்னும் சற்று விரிவாக விளக்குவதற்கு Firefox மென்பொருளின் வழமையான பதிப்பையும் அதன் போட்டபல் பதிப்பையும் எடுத்து நோக்குவோம்.

வழமையான Firefox மென்பொருளை நிறுவும் போது கணினியில் பல்வேறு மாற்றங்கள நிகழ்வதுண்டு. இயங்கு தளத்தில் பைல் அமைப்பில் (file structure) மாற்றம் விண்டோஸ் இயங்கு தளம் எனின் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் கணினியில் ஏற்கனவெ உள்ள HTML பைல்கள் மற்றும் இணைய தள முகவரிகள் அனைத்தும் பயபொக்ஸ் மென்பொருளுடனேயே திறந்து கொள்ளும் விதமாக பிரதான இணைய உலாவியாகுதல் .என பல மாற்றங்கள் நிகழும்எனினும் போட்டபல் பதிப்பு மேலே குறிப்பிட்டது போன்று எந்த வித மாற்றத்தையும் உண்டாக்குவதில்லை. கணினியில் எவ்வித மாற்றமும் செய்ய முடியா வண்ணமே அவை  உருவாக்கப்பட்டுகின்றன. இது போட்டபில் எப்லிகேசன்களின் சிறப்பியல்பாகும்.

சரி, இந்த போட்டபல் எப்ஸ் பயன் படுத்துவது எந்த விதத்தில் உங்களுக்குப் பயனளிக்கிறதுஇந்த போட்டபல் எப்ஸ்களை உங்கள் சாவிக் கொத்தில் மாட்டியுள்ள பென் ட்ரைவிலோ, கையடக்கத் தொலைபேசியிலுள மெமரி சிப்பிலோ அல்லது ட்ரொப் பொக்ஸ் போன்ற  இணைய பைல் சேர்வர்களிலோ ஏற்றிவிட்டால் போதும். நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் விருப்புக்குரிய எப்லிகேசனை தங்கு தடையின்றிப்  பயன் படுத்தலாம். உதாரணமாக  நீங்கள் பயபொக்ஸ் மென்பொருளை குறிப்பிட்ட சில நீட்சிகளோடு (நஒவநளெழைளெ) பயன் படுத்துகிறீர்களாயிருந்தால், அவற்றையும் கூடவே உங்களோடு எடுத்துச் செல்ல முடிவதோடு வேலைத்தளத்திலோ நண்பரின் கணியிலோ தேவையான  எப்லிகேசன்களைப் பயன் படுத்தவும் முடியும்.

மேலும் நீங்கள் ஒரு மென் பொருளை முழுமையாகக் கணினியில் நிறுவிப் பயன் படுத்த விரும்பினால் அதனை கணினியில் நிறுவாமலேயே முன் கூட்டியே பரீட்சித்துப் பார்க்கக் கூடிய வசதியும் போட்டபல் எப்ஸ் மூலம் கிடைக்கிறது. இந்த போட்டபல் எப்ஸ்களை கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தற்போது இவை கணினிப் பயனரிடையே பிரபல்யமடைந்து வருகின்றன.

போட்டபல் எப்ஸ் மென்பொருள்கள் பலவேறு இணைய தளங்களில் கிடைக்கின்றன. எனினும் portableApps.com என்பது ஒரு நம்பகமான இணைய தளமாக இருப்பதோடு ஏராள்மான பயனுள்ள இலவச போட்டபல் அப்லிகேசன்களையும்  கொண்டுள்ளது

-அனூப்-