PC Decrapifier

அவசியமற்ற மென்பொருள்களை அகற்றுவதற்கு..

புதிதாக ஒரு கணினியை வாங்கும்போது கூடவே சில எப்லிகேசன் மென்பொருள்களும் கணினி விளையாட்டுக்களும் நாங்கள் கேட்காமலேயே நிறுவப்படிருக்கும். அவற்றுள் எங்களுக்குப் பிடித்த அப்லிகேசன்களும் இருக்கும். பிடிக்காத மென்பொருள்களும் நிறுவப்பட்டிருக்கும். இந்த அவசியமற்ற மென்பொருள்கள் ஹாட் டிஸ்கிலும் நினைவகத்திலும் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்வதோடு கணினியின் இயக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவற்றை கணினியிலிருந்து அகற்றி விடுவதே நல்லது .

இது போன்ற உங்களுக்கு அவசியமற்ற மென்பொருள்களை அகற்றுவதற்கு விண்டோஸ் இயங்கு தளத்தில் Add/Remove Programs எனும் வசதியுள்ளது. எனினும் இதன் மூலம் ஒவ்வொரு ப்ரோக்ரமாக் அகறற வேண்டும். அவ்வாறு அகற்றுவதற்கு அதிக நேரம் விரயமாவதோடு  அதற்கு பொறுமையும் அவசியம். எனவே இது பொன்ற மென்பொருள்களைக் கணினியிலிருந்து இலகுவாகவும் ஒரே தடவையிலும் அகற்றுவதற்கு  PC Decrapifier எனும் மென்பொருள் கருவி உங்களுக்கு உதவுகிறதுஇந்த PC Decrapifier  எனும் மென்பொருள் கருவியை நீங்கள் www.pcdecrapifier.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளலாம்.

-அனூப்-