What is Proxy Server?
ப்ரொக்ஸி சேர்வர் Proxy Server என்றால் என்ன?
பாரிய வணிக நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ,தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போன்றன தற்போது தமது கணினி வலையமைப்பில் ப்ரோக்ஸி சேர்வர்களை நிறுவுகின்றன. ப்ரோக்ஸி சேர்வர் என்பது ஒரு நிறுவன கணினி வலையமைப்பில் காணப்படும் ஒரு சேர்வர் கணினியாகும். அந்நிறுவனம் சார்ந்த கணினி வலையைப்பில் உள்ள அனைத்து கணினிகளும் இந்த ப்ரொக்ஸி சேர்வரினூடாகவே இணையத்தினை அணுக வேண்டியிருக்கும்.
ப்ரொக்ஸி சேர்வர் பயன் படுத்துவதன் மூலம்.ஒரு நிறுவனம், கணினி வலயமைப்பினதும் இணையத்தினதும் வேகத்தினை அதிகரிக்க முடிவதோடு அவ்வலையமைபில் இணைந்துள்ள பயனர்களின் இணைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் முடிகிறது.
ப்ரொக்ஸி சேர்வர் ஒரு நிறுவன வலையமைப்பிலிருந்து இணையத்தை அணுகும்போது இணைய வேகத்தினை அதிகரிப்பதற்காக பதுக்கல் (caching) முறையைப் பின்பற்றுகிறது.

அதாவது நாம் பார்வையிடும் அனைத்து இணைய தளங்களிலுள்ள படங்கள போன்ற இணைய உள்ளடக்கங்களை நாம் பயன் படுத்தும் பிரவுஸர், எமது கணினி ஹாட் டிஸ்கில் சேமிப்பது போன்று ஒரு, ஒரு வலையமைப்பிலிருந்து இணையத்தின் ஊடாக அணுகப்படும் அனைத்து தகவல்களும் ப்ரொக்ஸி சேர்வர் கணினி ஹாட் டிஸ்கில் சேமிக்கப்படும்.
இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், ராம் என்பவர் cnn.com எனும் இனைய தளத்தில் மதியம் 1:00 மணிச் :செய்தியறிக்கைப் பக்கத்தைப் பார்வையிட்ட பின்னர், அதே பக்கத்தை ரவி என்பவர் மூன்று நிமிடம் கழித்துப் பார்வையிடுகிறார். என வைத்துக் கொள்வோம். இங்கு ரவி பார்வையிடும் போது ப்ரோக்ஸி சேர்வர் கணினி, அப்பக்கத்தைத் தனது பதுக்கல் நினைவகத்திலிருந்தே அவருக்கு எடுத்துக் காண்பிக்கும் வாய்ப்பு அதிகமாகும். இதன் காரணமாக அத் தளததை ரவி மிக வேகமாக அணுகமுடிகிறது. எனினும் அவ்விணைய தளthதின் மிக அண்மைய பதிப்பை காண்பதற்கான வாய்ப்பு சில வேளை கிடைக்காமல் போகலாம்.
ப்ரொக்ஸி சேர்வர் பயன்படுத்துவதன் மற்றுமொரு நோக்கம் ஒரு நிறுவன கணினி வலையமைப்பில் அனுமதிக்கப் படாத இணைய பயன் பாட்டைக் கட்டுப் படுத்தலாகும். இதன் மூலம் ஒரு நிறுவன வலையமைப்பினுள் குறிப்பிட்ட இணைய தளங்களைp பயனர்கள் அணுக விடாது தடுக்கலாம். தமது நிறுவன உழியர்கள் eBay, facebook போன்ற தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவதாக உணர்ந்தால் ப்ரோக்ஸி சேர்வர் மூலமாக அவ்விணைய தளங்களை அணுக விடாது இலகுவாகத் தடுக்கலாம்.
விசைப் பலகையில் உள்ள Ctrl விசையை அழுத்தியவாறு மவுஸின் நடுவிலுள்ள சில்லை மேலும் கீழும் நகர்த்துவதன் டெஸ்க்டொப் திரையில் உள்ள ஐக்கன்களின் அளவைப் பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும். விஸ்டா மற்றும் அதற்குப் பிந்திய விண்டோஸ் பதிப்புகளில் மட்டுமே இதனைச் செயற்படுத்தலாம் எனதை நினைவில் கொள்ளவும்.
-அனூப்-
Post Comment