Sure Delete - Delete your files permanently

பைல்களை நிரந்தரமாக அழிக்க - Sure Delete

நீங்கள் பயன் படுத்திய  கணினியை வேறு ஒருவருக்கு விற்கும்போதோ அல்லது நன்பருக்குப் பரிசளிக்கும் போதோ ஹாட் டிஸ்கில் உள்ள பைல்களை நிரந்தரமாக அழித்து விட்டுக் கொடுப்பதே நல்லது. எனினும் ஹாட் டிஸ்கிலிருந்து அழிக்கும் பைல்கள் நிரந்தரமாக அழிவதில்லை என்பதை அறிவீர்கள். உங்கள் நண்பர் கொஞ்சம் விசயம் தெரிந்தவராக இருந்தால் உங்கள்  வங்கிக் கணக்கு விவரங்கள், பாஸ்வர்ட்கள் போன்ற அந்தரங்க விடயங்களை அந்த ஹாட் டிஸ்கிலிருந்து மீட்டு விட முடியும்.

அதே போன்று பென் ட்ரைவ், டிஜிட்டல்  கேமரா போன்ற கருவிகளை இரவல் கொடுக்கும்போது அல்லது பழுது பார்க்கக் கொடுக்கும் போது அதிலுல்ள மெமெரி சிப்பிலிருந்து படங்கள் வீடியோக்கள் போன்ற வற்றை  அழித்து விட்டுக் கொடுத்தாலும்  அவற்றிலிருந்து பைல்களை  மீட்டெடுக்க முடியும். இவ்வாறு பைல்களை மீட்க முடியுமென்பது ஒரு வசதியாகாக் கருதப் பட்டாலும் சில வேளை அந்த வசதியே நமது அந்தரங்கத்தைப்  பகிரங்கப் படுத்தி  எங்களை சிக்கலில் மாட்டி விடவும் முடியும்..


ஹாட் டிஸ்க், பென் ட்ரைவ், மற்றும் மெமரி சிப் போன்றவற்றிலிருந்து அழிக்கும் பைலை மறுபடி மீட்டெடுக்க முடியாத விதத்தில்  அழிக்கும் வசதியும் நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது, அழித்த பைலை மறுபடு மீட்க முடியுயாமல் தடயமே இல்லாமல் அழிக்கும் ஒரு மென்பொருள் கருவிதான்  Sure Delete  இதனை நீங்கள்  இணையத்திலிருந்து  இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளலாம்.

அனூப்



-