How to install Linux using a pen drive?

பரீட்சித்துப் பார்க்கலாம் பென் ட்ரைவ்லினக்ஸ் 


லின்க்ஸ் என்பது ஒரு திறந்த மூல (open source) இயங்கு தளம். இந்த லினக்ஸ் இயங்கு தளத்தின் அடிப்படையில் Ubuntu, Kubuntu, Fedora, Suse என ஏராளமான  இயங்கு தளங்கள் உருவாக்கப் பட்டுள்ளளன. விண்டோஸ் போலன்றி இவை அனைத்தும் இலவசமகாவே கிடைப்பதால் இவற்றிற்கான வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரி;த்துக் கொண்டே வருகிறதுவிண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பழக்கப் பட்டவர்கள் இவற்றைக் கணினியில் நிறுவாமலேயே பென் ட்ரைவ் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்கு வசதியுள்ளது.

நான் இங்கு உபண்டு எனும் லினக்;ஸ்; பதிப்பை எவ்வாறு பென் ட்ரைவ் மூலம் இயக்கலாம் என்பதை கீழே விவரிக்கின்றேன்.

இதற்கு உங்களிடம் இணைய இணைப்பு; 2 GB அளவிலான ஒரு பென் ட்ரைவ் மற்றும் பென்ட்ரைவ் போன்ற புறச் சாதனங்;களிலிருந்து கணினியை பூட் செய்யக் கூடியு வசதியுள்ள ஒரு விண்டோஸ் கணினியும் (Windows XP/Vista/7)  அவசியம்.

முதலில் உபண்டு இணைய தளத்திற்குச் சென்று அதன் புதிய பதிப்பை டவுன்லோட் செய்து கொள்;ளுங்கள். இந்த டவுன்லோட் சேய்யும் பைல் .ISO வடிவில் சுமார் 600 MB அளவில் இருக்கும்.

அடுத்து  J  www.pendrivelinux.com எனும் தளத்திற்குச் சென்று Universal-USB-Installer-1.9.5.2.exe எனும் சிறிய யூட்டிலிட்டியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் நீங்கள் டவுன் லோட் செய்த யூட்டிலிடியை இயக்கியதும் தோன்றும் விசர்டில் Agree என்பதைக் க்ளிக் செய்ய படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு சிறிய விண்டோ தோன்றும்இங்கு Step 1 எனுமிடத்தில் உரிய லினக்ஸ் பதிப்பைத்  (Ubuntu) தெரிவு செய்யுங்கள்அடுத்து Step 2  எனுமிடத்தில் நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்துள்ள உபண்டு ISO பைல் கணினியில் சேமிக்கப் பட்டுள்ள இடத்தைக் காட்டி விடுங்கள். Step 3 யில் உங்கள் பென்; ட்ரைவுக்குரிய எழுத்தை (Drive letter) தெரிவு செய்யுங்கள்நான்காவதாக கணினியில் செய்யும்; மாற்றங்களைச் சேமி;ப்பதற்காக போதிய அளவு இடத்தை ஸ்லைடரை இழுப்பதன் மூலம் வழங்குங்கள். இது கட்டாயம் இல்லை. இறுதியாக  கீழுள்ள  Create பட்டனில் க்ளிக் செய்யுங்க்ள். ஒரு சில நிமிடங்களில் பென் ட்ரைவிலிருந்து உபண்டு பதிப்பை இயக்கக் கூடியவாறு மாற்றியமைக்கப்படும்.

அடுத்து உங்கள் கணினியை மறுபடி இயக்குங்கள். கணினி இயங்கும் போது  Del  விசையை அழுத்தி Bios Setup னுள் நுழையுங்கள்அங்கு Boot Sequence இல் USB அல்லது External drive தெரிவு செய்து அதனை சேமித்து விட்டு Bios லிருந்து வெளியேறுங்கள். உங்கள் கணினி USB boot ஆதரிக்குமனால் அடுத்த சில வினாடிகளில் உபண்டு இயங்கு தளம் இயங்க ஆரம்பிப்பதை அவதானிக்கலாம்.

அனூப்